ஆர் என்னும் இடைச்சொல் பெயர்முன் அல்லது வாரா என்பது.
வரலாறு:
‘அரசனார் வந்தார்; பார்ப்பார் வந்தார்’ எனவரும்.
இனி விலங்கின்மேலும், ‘யானையார் வந்தார்;
நாயார் வந்தார்’ என வரும்.
‘பெயர்முன் ஆரைக் கிளவி பலர்க்குரி எழுத்தின் வினையொடு முடித்தல் இயல்பல’ என எல்லாப் பெயரும் அடங்க மொழிமாற்றி உரைக்க.
(22)
266.
அசைநிலைக் கிளவி யாகுவழி யறிதல்.
வரலாறு:
இது, ‘செல்ல மன்னார் நெடுந்தகை’ எனவரும். (23)
267.
ஏவுங் குரையு மிசைநிறை யசைநிலை
யாயிரண் டாகு மியற்கைய வென்ப.
உரை:
ஏ - இசைநிறை; குரை - அசைநிலை என நிரனிறையாகக் கொள்க.
வரலாறு:
‘ஏஏ வம்பல் மொழிந்தனம் யாமே’
ஏ - இசைநிறை யாயினவாறு.
‘பல்குரைத் துன்பங்கள் சென்று படும்’ [குறள். நல்குரவு-5]
எனக் குரை அசைநிலை. (24)
268.
மாவென் கிளவி வியங்கோ ளசைச்சொல்.
வரலாறு:
இது,
‘மாயக் கடவுட் குயர்கமா வலனே’
உயர்க என்னும்
வியங்கோட்கண் மா என்னுஞ் சொல் அசைநிலையாய் வந்தது. (25)
269.
மியாயிக மோமதி யிகுஞ்சின் னென்னு
மாவயி னாறு முன்னிலை யசைச்சொல்.
உரை:
முன்னிலைக்கண் அசைச் சொல்லாய் வருவன இவை என்றவாறு.
வரலாறு:
மியா : ‘கேண்மியா.’
இக : ‘தண்டுரை யூரயாங் கண்டிக’
மோ : ‘காமஞ் செப்பாது கண்டது மொழீமோ’ [குநுந்-2]
மதி : ‘சென்மதி பெரும’
இகும்: ‘மெல்லம் புலம்ப கண்டிகும் யாமே’
சின்: ‘காப்பும் பூண்டிசிற் கடையும் போகல்’ [அகம்-7]
(26)
270.
அவற்றுள் இகுமுஞ் சின்னு மேனை யிடத்தொடுந் தகுநிலை யுடைய வென்மனார் புலவர்.
வரலாறு:
இகும், தன்மைக்கண் வருமாறு: ‘கண்டிகு மல்லமோ கொண்க’ [ஐங்குறு-121]
என வரும்.
படர்க்கை: ‘புகழ்ந்திகு மல்லளோ பெரிதே’
என வரும்.
சின்,
|