இளம்பூரணர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   1274
Zoom In NormalZoom Out


னெனா,   பூதனெனா, அம் மூவரும் வந்தார்’ என, எனா என்னும்
எண்ணினிறுதிக்கண்  மூவரும்  எனத் தொகைகொடுத்து எண்ணினவாறு
கண்டுகொள்க. 

‘சாத்தன், கொற்றன், பூதன்  என  மூவரும்  வந்தார்’  என  வரும்
செவ்வெண்

‘சாத்தன் என்றா, கொற்றன் என்றா,  பூதன்  என்றா  என மூவரும்
வந்தார்’ என வரும் என்றா எண்

‘சாத்தனே, கொற்றனே, பூதனே என  மூவரும் வந்தார்’ என வரும்
ஏகார எண்

தொகைபெற்று முடிந்தவாறு கண்டுகொள்க. (42) 

286.  உம்மை யெண்ணி னுருபுதொகல் வரையார். 

வரலாறு: 

‘யானையும்    தேரும் ஆளும் எறிந்தார்’ என்பது, யானையையும்
தேரையும்  ஆளையும்  எறிந்தார்  என்றவாறு; உம்மையெண்ணின்கண்
உருபுதொக்கவா றாயிற்று. (43)   

287. உம்முந் தாகு மிடனுமா ருண்டே. 

வரலாறு: 

‘நீர்க்கோழி கூஉய்ப்பெயர்க் குந்து’      [  புறம் - 395  ]

என்பது.

எட்டு வகைப்பட்ட உம்மையும் ஒரும்மை எனப் படாது, வினைசெய் மருங்கிற் காலமொடு வந்தது. (44) 

288. வினையொடு நிலையினு மெண்ணுநிலை திரியா
நினையல் வேண்டு மவற்றவற் றியல்பே. 

என்பது,     எண்மேலே  யெண்களைக்  காட்டின  வழியெல்லாம்
பெயரொடுபடுத்தே  காட்டினார்;  இனி, வினையோடு அவ்வெண்களைக்
காட்டுகின்றார்: 

வரலாறு: 

‘அறுத்துக்     குறைத்துச்  சுகிர்ந்து  வகிர்ந்து  இட்டான்’  எனச்
செவ்வெண்  வினையான்  எண்ணினவாறு,  அச்சுறுத்தும்  குறைத்தும்
சுகிர்ந்தும்  வகிர்ந்தும்  இட்டான்  என  உம்மை யெண் வினையொடு
கூட்டி எண்ணினவாறு. 

பலவெண்ணும் வினைக்கு வாரா; வருமிடத்து இத் தொடக்கத்தனவே
வருவன கொள்க. 

‘மண்டில மழுங்க மலைநிறங் கிளர
வண்டின மலர்பாய்ந் தூத மீமிசைக்
கண்டற் கானற் குருகின மொலிப்ப’   [  அகம் - 260  ]

என, வினையொடுகூ