இளம்பூரணர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   1279
Zoom In NormalZoom Out


குறிப்புப்பற்றித்  தோன்றும்  உரிச்சொற்கள்  பலவாகலான்  அவற்றுப்
பகுதி முற்கூறிய தொடங்கினார்.
 

உரை :  இக்கூறப்பட்ட  மூன்று   உரிச்   சொல்லும்    மிகுதிப்
பொருண்மையை விளக்கும் என்றவாறு.
 

வரலாறு : 

‘உறுகா லொற்ற வொல்கி’ (நற்றிணை - 300)

என்பது, மிகுகாலொற்ற வொல்கி என்பதாம். 

‘தவச்செய் நாட்டா ராயினும்’ (நற்றினை - 115)

என்பது, மிகச்சேய நாட்டார் என்பதாம். 

‘நனிசேய்த் தன்றவன் பழவிறன் மூதூர்’

என்பது, மிகச்சேய்த் தன்றவன் பழவிறன் மூதூர் என்பதாம். (3) 

295. உருவுட் காகும் புரையுயர் பாகும். 

இச்சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், இதுவும் குறிப்பு.

வரலாறு : 

‘உருவக் குதிரை’ (அகம் - 1)

என்றக்கால், உட்கத்தக்க குதிரை என்பதாம். 

‘புரைய மன்ற புரையோர் கேண்மை’ (நற்றிணை - 1)

என்பது, உயர்ந்துயர்ந்தோர் கேண்மை என்பதாம். (4)  

296. குருவுங் கெழுவும் நிறனா கும்மே. 

வரலாறு : 

‘குருத்துளி பொழிந்தது’

‘கேழ்கிள ரகலத்து’ (மதுரைக்காஞ்சி - 493)

என்றக்கால், அவையிரண்டினும் நிறம் சொன்னவாறு. (5)  

297. செல்ல லின்ன லின்னா மையே. 

இச்சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், இதுவும் குறிப்பு.  

உரை : இவை இரண்டும் நோய்ப் பொருண்மைய ஆகும்
என்றவாறு.
 

வரலாறு : 

‘மணங்கமழ் வியன்மார் பணங்கிய செல்லல்’ (அகம்-22)

என்புழி, நோய் என்பதாம்; 

வெயில்புறந் தரூஉ மின்ன லியக்கம்’ (மலைபடுகடாம்-374)

என்றவிடத்தும் அதுவாம். (6)  

298. மல்லல் வளனே யேபெற் றாகும். 

  வரலாறு: 

‘மல்லன் மாமலை’

என்றக்கால், வளனுடைய மாமலை என்பதாம். 

‘ஏகலடுக்கம்’ (அகம்-52)

என்றக்கால், பெற்றிய கல்லடுக்கம் என்பதாம். (7)  

299. உகப்பே யுயர்த லுவப்பே யுவகை. 

  வரலாறு: 

‘நாடுகாண மேன்மே லுகமின்’

என்பது,   நாடுகாணிக்   கன்மே  லேறினான்  மேன்மேல்  உயர்மின்
என்பதாம்.
 

‘உவக்குந ளாயினும் ஊடின ளாயினும்’ (அகம்-203)

என்புழி, உவ