இளம்பூரணர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   1280
Zoom In NormalZoom Out


த்தனளாயினும் என்பதாம். (8) 

300. பயப்பே பயனாம். 

இச்சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், இவை யெல்லாங் குறிப்பு.

வரலாறு:

‘ஆண்பயமுந் தூக்கினென்’

என்புழிப், பயன் கூறியவாறு. (9) 

301. பசப்பு நிறனாகும். 

இச்சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், இது பண்புபற்றி வந்தது.

வரலாறு :

‘பசப்பித்துச் சென்றார்’

என்புழி, நிறம் கூறியவாறு. (10) 

302. இயைபே புணர்ச்சி.. 

இச்சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், இதுவுங் குறிப்பு.

வரலாறு :

‘இயைந்தொழுகும்’

என்றக்கால், பொருந்தி யொழுகும் என்பதாம். (11) 

303. இசைப்பிசை யாகும். 

இச்சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், இஃது இசைபற்றி வந்தது.

வரலாறு :

‘இசைந்தொழுகும்’

என்றக்கால், இசையத் தோன்றிவிடும் என்பதாம். (12) 

304. அலமர றெருமர லாயிரண்டுஞ் சுழற்சி. 

இச்சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், இதுவுங் குறிப்பு.

வரலாறு :

‘அலமரலாயம்’ (ஐங்குறு - 64)

என்றக்கால், சுழன்றுவரல் ஆயம் என்பதாம்.

‘தெருமரலுள்ளம்’

என்பது, சுழன்று வரும் உள்ளம் என்பதாம். (13) 

305. மழவுங் குழவு மிளமைப் பொருள. 

இச்சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், இதுவுங் குறிப்பு.

வரலாறு :

‘குழக்கன்று கடிதியாத்தாள்’

என்றக்கால், இளங்கன்று கடிதியாத்தாள் என்றதாம்.

‘மழகளிறு’ (புறம்-38)

என்றக்கால், இளங்களிறு என்றவாறாம். (14) 

306. சீர்த்தி மிகுபுகழ். 

வரலாறு:

‘வயக்கஞ்சால் சீர்த்தி’

என்றக்கால், மிக்கபுகழ் என்பதாம். (15) 

307. மாலை யியல்பே. 

வரலாறு:

‘இரவரன் மாலையன்’ (குறிஞ்சிப்பாட்டு - 239)

என்றவழி, இரவின் வரும் இயல்பினன்