இளம்பூரணர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   1281
Zoom In NormalZoom Out


என்றதாம்.                                              (16) 

308. கூர்ப்புங் கழிவு முள்ளது சிறக்கும்.

வரலாறு :

‘உப்புக் கூர்ந்தது’

‘உப்புக் கழிந்தது’

என்பன, சிறப்புச் சொல் லாயவாறாம். (17)

309. கதழ்வுந் துனைவும் விரைவின் பொருள.

வரலாறு:

‘அண்டர்,
கயிறிரி யெருத்திற் கதழுந்துறைவன்’
 

என்றக்கால், விரையுந் துறைவன் என்பதாம்.

‘துனைபொறை நிவக்கும் புள்ளின் மான’

என்றக்கால், விரைந்து பறக்கும் என்றவாறாம். (18)

310. அதிர்வும் விதிர்ப்பு நடுக்கஞ் செய்யும்.

இச்சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், இவை யெல்லாங் குறிப்பு.

வரலாறு :

‘அதிர்கண் முரசம்’

என்றக்கால், நடுங்குகண் முரசம் என்பதாம்.

‘விதிர்ப்புற்றுக் கண்ணிமையார்’

என்றக்கால், நடுக்குற்று என்பதாம். (19)

311. வார்தல் போக லொழுகன் மூன்று
நேர்பு நெடுமையுஞ் செய்யும் பொருள.

இச்சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், இது பண்புபற்றி வந்தது.

வரலாறு :

‘வார்கயிற் றொழுகை’ (அகம் - 173)

என்றக்கால்,   நேர்   கயிற்றொழுகை    என்பதூஉம்,    நெடுங்
கயிற்றொழுகை என்பதூஉமாம்.

‘போகு கொடி’

‘ஒழுகு கொடி’

என்புழியும், அவ்விருபொருளும் படும். (20)

312. தீர்தலுங் தீர்த்தலும் விடற்பொருட் டாகும்.

இச்சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், இதுவுங் குறிப்பு.

வரலாறு :

‘ஊரிற் றீர்ந்தான்’

என்றக்கால், ஊரிற் பற்றுவிட்டான் என்பதாம்.

‘பேய் தீர்த்தான்’

என்றக்கால், பேய் விடுவித்தான் என்பதாம். (21)

313. கெடவரல் பண்ணை யாயிரண்டும் விளையாட்டு

வரலாறு :

‘கெடவர லாயம்’

என்றக்கால், விளையாட் டாயம் என்பதாம்.

‘பண்ணைத் தோன்றிய வெண்ணான்கு பொருளும்’

                               (தொல் - மெய்ப்பாட்டி - 1)

என்றக்கால், வி