ளையாட்டுள் தோன்றியபொருள் என்பதாம்.
314. தடவுங் கயவும் நளியும் பெருமை.
வரலாறு:
‘தடத்தோள்’
‘கயவெள் ளருவி’ (அகம்-38)
‘நளிமலை நாடன்’ (புறம்-150)
என வரும். (23)
315. அவற்றுள்
தடவென் கிளவி கோட்டமுஞ் செய்யும்.
உரை:தட என்பது பெருமையை யன்றிக் கோட்டப்
பொருளினையும் விளைக்கும் என்றவாறு.
வரலாறு:
‘தடமருப் பெருமை’ (நற்றிணை - 120)
எனவரும். (24)
316. கயவென் கிளவி மென்மையுஞ் செய்யும்.
வரலாறு :
‘கயந்தலை மடப்பிடி’ (நற்றிணை - 137)
என வரும். (25)
317. நளியென் கிளவி செறிவு மாகும்.
உரை : நளி என்னும் சொல் பெருமையே யன்றிச் செறிவுப்பொருளும் படும் என்றவாறு.
வரலாறு :
‘நளியிருள்’
என்றக்கால், செறியிருள் என்பதாம்.
மூன்றிடத்து உம்மையும் இறந்தது தழீஇயின. (26)
318.
பழுது பயமின்றே.
வரலாறு :
‘பழுதே வந்தார்’
என்றக்கால், பயமின்றியே வந்தார் என்பதாம். (27)
319. சாயன் மென்மை.
வரலாறு:
‘சார னாடன் சாயன் மார்பு’ (பதிற்றுப்-16)
சான்றக்கால், மெல்லிய மார்பு என்பதாம். (28)
320.
முழுதென் கிளவி யெஞ்சாப் பொருட்டே.
வரலாறு :
‘முழுக்கறை பெய்தான்’
என்றக்கால், எஞ்சாமை பெய்தான் என்பதாம். (26)
321.
வம்பு நிலையின்மை.
வரலாறு :
‘வம்ப வடுகர்’ (அகம்-375)
‘வம்ப நாரை’ (அகம்-190)
என்றக்கால், நிலையில்லாமை கூறியவாறாம். (30)
322.
மாதர் காதல்.
வரலாறு :
‘மாதர் வண்டொடு சுரும்பிசைத்தது’
என்றக்கால், காதல் வண்டு என்பதாம். (31)
|