இளம்பூரணர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   1284
Zoom In NormalZoom Out


திருந்தார் என்பதூஉம், துணிந்திருந்தார் என்பதூஉம் ஆம். (40)

332. பிணையும் பேணும் பெட்பின் பொருள.

உரை : பெட்டல் என்பது புறந்தருதல்.

வரலாறு :

‘அரும்பிணை பயக்கற்ற வேட்ட ஞான்று’

என்றக்கால், அரும்புறந்தரு வரவிற்றாகி வேட்டபோழ்து என்பதாம்.

‘பேணினே னல்லனோ மகிழ்ந’ (அகம் - 16)

என்றக்கால், பெட்டேனல்லனோ மகிழ்ந என்பதாம். (41)

333. பணையே பிழைத்தல் பெருப்பு மாகும்.

இச்சூத்திரம்    என்னுதலிற்றோ    வெனின்,    இவை    யெல்லாங்
குறிப்புச்சொல்.

வரலாறு :

‘பணைத்துப்போய் வீழ்ந்தது’

என்றக்கால், பிழைத்துப் போய் வீழ்ந்தது என்பதாம்.

‘பணைத்தோள்’ (அகம் - 1)

என்றக்கால், பெருந்தோள் என்பதாம். (42)

334. படரே யுள்ளல் செலவு மாகும்.

வரலாறு :

‘படர்மலி வெற்பர்’

என்றக்கால், உள்ளல்மலி வெற்பர் என்பதாம். 

‘ஆறு படர்ந்தார்’

என்றக்கால், சென்றார் என்பதாம். (43)

335. பையுளுஞ் சிறுமையும் நோயின் பொருள.

வரலாறு :

‘பையுணல்யாழ்

என்றக்கால், நோய் செய்யும் நல்யாழ் என்பதாம்.

‘சிறுமை யுறுப செய்பறியலர்’ (நற்றிணை - 1)

என்றக்கால், நோயுறுப செய்யார் என்பதாம். (44)

336. எய்யாமை யறியாமை.

வரலாறு :

‘எய்யாமையலை’ (குறிஞ்சிப்-8)

என்றக்கால், அறியாமையலை என்றவாறாம். (45)

337. நன்று பெரிதாகும்.

338. தெவுக்கொளற் பொருட்டே.

இரண்டு சூத்திரமும் உரை நோக்கி ஒன்றா யெழுதப்பட்டது.

வரலாறு :

‘நன்றுமரிது துற்றனையாற் பெரும’ (அகம்-10)

என்றக்கால், பெரிது துற்றனையால் என்பதாம்.

‘நீர்தெவு நிரைத்தொழுவர்’ (மதுரைக்காஞ்சி - 89)

என்றக்கால், நீர்கொள்ளும் நிரைத்தொழுவர் என்பதாம். ()

339. தாவே வலியும் வருத்தமு மாகும்.

வரலாறு :

‘கருங்கட் டாக்கலை’ (குறுந் - 69)

என்றவழி,