யவுறுத்தார்’
என்பது, அறிவு திரிவுறுத்தார் என்பதாம். (71)
363.
உயாவே யுயங்கல்.
வரலாறு:
‘பருந்திருந் துயாவிளி பயிற்று
மியாவுயர் நனந்தலை’ (அகம் - 19)
என்றக்கால், உயங்கு விளி பயிற்றி என்பதாம். (72)
364.
உசாவே சூழ்ச்சி.
வரலாறு:
‘நாமுசாக் கொள்ளாமோ’
என்பது, நாம் சூழ்ந்துகொள்ளாமோ என்பதாம். இவை குறிப்பு. (73)
365.
வயாவென் கிளவி வேட்கைப் பெருக்கம்.
வரலாறு:
‘கூழ்கண்டு வயாவினார்’
என்றவழி, வேட்கை யாயினார் என்பதாம். (74)
366.
கறுப்புஞ் சிவப்பும் வெகுளிப் பொருள.
வரலாறு:
‘கறுத்து வந்தார்’
என்பது, வெகுண்டு வந்தார் என்பதாம்.
‘சிவந்து நோக்கினார்’
என்பது, வெகுண்டு நோக்கினார் என்பதாம். (75)
367.
நிறத்துரு வுணர்த்தற்கு முரிய வென்ப.
இச்சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், அதுவே யன்றிப் பண்புப்பொருளும் படும் என்றவாறு.
‘உடம்பு கறுத்தது’
‘கண் சிவந்தன’
என்பன, நிறத்தின் மேலும் செல்லும். (76)
368.
நொசிவு நுழைவு நுணங்கு நுண்மை.
இச்சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், இவை பண்பு பற்றி வந்தன.
‘நொசி மருங்குல்’
என்பது, நுண்மருங்குல் என்பதாம்;
‘நுழை மருங்குல்’
என்பதும் அது;
‘நுணங்கு மருங்குல்’
என்பதும் அது. (77)
369.
புனிறென் கிளவியீன் றணிமைப் பொருட்டே
வரலாறு:
‘புனிற்றாப் பாய்ந்தெனக் கலங்கி’ (அகம்-56)
என்பது, ஈன்றணியவாய்ப் பாய்ந்தென என்பதாம். (78)
370.
நனவே களனு மகலமுஞ் செய்யும்.
வரலாறு:
‘நனவுப்புகு விறலியிற் றோன்று நாடன்’
என்றால், களம்புகு விறலியிற் றோன்று நாடன் என்பதாம்.
‘நனந்தலை யுலகு’ (குறுந் - 6)
என்றக்கால், அகன்றலை யுலகு என்பதாம். (79)
371.
மதவே மடனும் வலியு மாகும்.
|