இளம்பூரணர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   1291
Zoom In NormalZoom Out


பொருளே. 

இச்சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், இது புறனடை. 

உரை : பொருண்மேற் சொல்லப்பட்ட உரிச்சொல் எல்லாவற்றையும்
முன்னைச்சொல்  பின்னைச்சொல்  நோக்கி,  அதற்கு இயைந்த மொழி
நாடி,  அவற்றொடு  புணர்த்து  உணர்த்துக.  அவ்வாறு  உணர்த்தவே
தத்தம்  மரபிற் றிரியாப் பொருளவாய்த் தோன்றும்; அவ்வாறு தெரிந்து
உணராக்கால் கொள்ளாதாம் கருதியபொருள் என்பது. 

யாதோ கொள்ளாத வாறெனின், 

‘கடியுடை வியனகர்’                      (புறம் - 95) 

என்றக்கால்,  கடியென்பது  கூர்மையும்  விரைவும்   படுமால்  என்று,
நகரத்துக்கண்  அவை  யேற்றற்க  ;  காப்புடை  நகர் என்று கொள்க,
அதற்கு ஒத்த மொழியாகலின் என்பது. (92) 

384. கூறிய கிளவிப் பொருணிலை யல்லது
வேறுபிற தோன்றினு மவற்றொடு கொளலே.
 

இச்சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், இதுவும் புறனடை. 

உரை : சொல்லிப் போந்த உரிச்சொற்கள் அவ்வுரியவெனப்பட்ட
பொருளின  ஆகாது  வேறுவேறு பட்ட பொருளினவாய்த் தோன்றினும்
அச்    சொல்லப்பட்ட   பொருளொடு   படுத்துப்   பொருள்படுமாறு
அறிந்துகொள்க என்பதாம். 

‘புரைப்பட்ட’ 

என்புழிப்,  புரை   என்பது    ஈண்டுப்     பிளவுப்பொருண்மையை
விளக்கிற்றாகலின்,  இதனையும்  உயர்வுப்பொருண்மையொடு புணர்த்து
இருபொருளும்  அச்சொற்குப்  பொருள்  என்று  கொள்க என்பதாம்.
இனிக், 

‘கண்கதழ வெழுதினார்’ 

என்புழி, ஆண்டு  விரைந்து  எழுதினார்  என்று  விரைவிற் பொருள்
கொள்ளற்க ; சிறப்ப எழுதினார் என்று கொள்க. பிறவும் அன்ன. (93) 

385. பொருட்குப்பொரு டெரியி னதுவரம் பின்றே. 

இச்சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், இதுவும் புறனடை. 

உரை :  மேற்கூறப்பட்ட     உரிச்சொல்லுள்     உளவன்றே,
அப்பொருட்கும் இப்பொருட்கும் உரியவென்று ஓதப்பட்டன. அவை, 

‘உறு தவ நனி’                    (தொல். உரிச் - 3) 

என்னுந் தொடக்கத்தக்கன. 

மற்று, அவற்