இளம்பூரணர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   1292
Zoom In NormalZoom Out


றை  மிகுதிப்  பொருள  என்றார்.  அதுபற்றி    மிகுதி   யென்னை?
என்றாற்கு, ஒன்றுவிடப் பெரிதாக என்பவால் எனின், அதனைக் கேட்டு
ஒழியான்   ;   பெரிது  எனப்படுவது  என்னை?  என்றான்  ;  எனச்
சாலவாதல்   என்றான்   ;   என்பதனானும்   ஒழியான்,  சாலவாதல்
எனப்படுவது  என்னை?  என்றான்  ;  என, எத்துணையும் இறங்குதல்
என்றான்  ;  என, அத்துணையும் என்னை? என்று இவ்வாறு பிரித்துச்
சொற்களால் தெரிபு கூறுமேல் அது வேண்டா என விலக்கினவாறு. (94)

386. பொருட்குத் திரிபில்லை புணர்த்த வல்லின். 

இச்சூத்திரம்   என்னதலிற்றோ   வெனின்,  இது மேற்சூத்திரத்திற்குப்
புறனடை.

உரை :   உரிச்சொல்   பிறிதலது,   அது  பொருள்  உணருமாறு
வல்லாற்குப்  பிறசொற்  கொணர்ந்து  பொருள் உணர்த்தல் வேண்டா ;
திரிபின்றி அச் சொல்லினானே உணரப்படும் என்றவாறு.

என்னை,  ‘உறு’ என்ற பதம் மிகுதிப் பொருட்டு என்றக்கால், அம்
மிகுதியையும்   அதனானே  யுணரலாம்  ;  உணருமாறு  வல்லாற்குப்
பிறசொற் கொணர்ந்து உரைத்தல் வேண்டா என்பது. (95)

387. உணர்ச்சி வாயி லுணர்வோர் வலித்தே. 

இச்சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், இதுவும் புறனடை.

யாஞ்   சொல்லிய சொல்வாயிலே பற்றி யுணர்த்துக, அத்துணையால்
உணர்வார்க்கு   அதுவே   உணர்ச்சி   வாயிலாம்   ;   அல்லாக்கால்
அவ்வுணர்வோரை வலித்தாமாற்றால் உணர்த்துக என்பதாம்.

என்னை,

‘பரவும் பழிச்சும் வழுத்தின் பொருள’   (தொல். உரி - 85)

என்பதனால்     உணராத   மடவோரை   மற்றொரு வாய்பாட்டால்
உணர்த்துக.  அல்லாக்கால்,   மேல்   நோக்கிச்   சில   மலர்கொடு
தூவிக்காட்ட வுணருமேல் அஃதே உணர்ச்சி வாயிலாக அறிக என்பது.
(96)