டு சிவணித்
தம்பொருள் வழாஅமை யிசைக்குஞ் சொல்லே.
இச்சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், மேல் நிறுத்த முறையானே இயற்சொல்லை யின்னவென்று இலக்கண முறைமையாற் பகுத்து உணர்த்துதல் நுதலிற்று.
* ‘பரிமாணச் சூத்திரம்’ பிரதிபேதம்.
உரை : மேற் சொல்லப்பட்ட நான்கு சொல்லுள்ளும் இயற்சொல் என்று கூறப்படுவன செந்தமிழ் நிலத்தார் வழங்கும் வழக்கத்திற்குப் பொருந்தித் தத்தம் பொருளின் வழாமல் நடக்குஞ்சொல் என்றவாறு.
அவை : சோறு, கூழ், பால், பாளிதம் என்னுந் தொடக்கத்தன.
செந்தமிழ் நிலம் என்பது வையையாற்றின் வடக்கு, மருதயாற்றின் தெற்கு, கருவூரின் கிழக்கு, மருவூரின் மேற்கு, மற்று இவற்றைத் தம் பொருள் வழாஅமை யிசைக்கும் என்பது என்னை? ஒழிந்தன தம் பொருள் வழுவுமோ
எனின், அற்றன்று, நாயை ஞமலி என்ப பூழி நாட்டார்,
என்றக்கால் அச் சொல் எல்லா நாட்டாரும் பட்டாங்குணரார் ; நாய் என்பதனையாயின் எவ்வெத்திசை நாட்டாரும் உணர்ப என்பது. (2)
393.
ஒருபொருள் குறித்த வேறுசொல் லாகியும்
வேறுபொருள் குறித்த வொருசொல் லாகியு
மிருபாற் றென்ப திரிசொற் கிளவி.
இச்சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், முறையானே திரிசொல் இவை என்று இலக்கணத்தாற் பகுத்து உணர்த்துதல் நுதலிற்று.
உரை : ஒரு பொருளைக் கருதிப் பலசொல்லான் வருதலும், பலபொருளைக் கருதி ஒருசொல்லான் வருதலும் என இருகூற்றனவாகும் திரிசொற்கள் என்றவாறு.
ஒரு பொருளைக் குறித்த வேறு சொல்லாகி வருவன, அடுக்கல், பிறங்கல், விண்டு,
|