இளம்பூரணர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   1297
Zoom In NormalZoom Out


ஓங்கல் என இவை. 

வேறு    பொருள்    குறித்த   ஒருசொல்,   உந்தி   என்பது   ;
ஆற்றிடைக்குறையும்,   கொப்பூழும்,   தேர்த்தட்டும்,   யாழகத்ததோர்
உறுப்பும் (மனஞெழிலும்) என இவை யெல்லாம் விளங்கி நிற்கும். 

இனி,     கிள்ளை, மஞ்ஞை என்னுந் தொடக்கத்தன ஒருகூறு நிற்ப
ஒருகூறு   திரிந்தன   ;   உந்தி,  அடுக்கல்  என்னுந்  தொடக்கத்தன
முழுவதூஉம் வேறுபடத் திரிந்தன. பிறவும் அன்ன. (3) 

394. செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தினுந்
தங்குறிப் பினவே திசைச்சொற் கிளவி.
 

இச்சூத்திரம்     என்னுதலிற்றோ வெனின், நிறுத்த முறையானே
திசைச்சொல்   இவை   என  இலக்கணத்தால்  பகுத்து  உணர்த்துதல்
நுதலிற்று. 

உரை  :  செந்தமிழ் நாட்டை அடையும் புடையுங் கிடந்த பன்னிரு
நிலத்தார்தங்   குறிப்பினையே   இலக்கணமாகவுடைய,   திசைச்சொற்
கிளவிகள் என்றவாறு. 

வரலாறு : 

தாயைத் தள்ளை என்ப குடநாட்டார். 

நாயை ஞமலி என்ப பூழிநாட்டார். 

பிறவும் அன்ன. 

செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலமாவன : 

1. பொதுங்கர்நாடு 

2. தென்பாண்டிநாடு 

3. ஒளிநாடு 

4. குட்டநாடு 

5. பன்றிநாடு 

6. கற்காநாடு 

7. சீதநாடு 

8. பூழிநாடு 

9. மலைநாடு 

10. அருவாநாடு 

11. அருவாவடதலைநாடு 

12. குடநாடு * 

என இவை. 

* சில பிரதிகளில் இது வெற்றிடமாக விடப்பட்டுள்ளது. 

‘தங்குறிப்பினவே’ என்றது அவை ஒருவாய்பாட்டவே யல்ல ; தத்தம்
மரபினும்  பின்  வேறு வேறு வாய்பாட்ட என்றற்கும், அவர் எவ்வாறு
குறித்து  வழங்கினாரோ  அஃதே  அவற்றிற்கு இலக்கணம் என்றற்கும்
என்பது. (4) 

395. வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ
யெழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே.
 

இச்சூத்திரம்  நிறுத்த  முறையானே  வடசொல்  இவை என்றவற்றிற்கு
இலக்கணத்தான் அறிய உணர்த்துதல்