இளம்பூரணர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   1302
Zoom In NormalZoom Out


ற மொழிமாற்றுப் பொருள்கோள் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. 

உரை :   மொழிமாற்றினது   தன்மையாவது,   நின்ற   சொல்லை
மொழிமாற்றி,  முன்னும்  பின்னும்  கொள்ளுமிடம்  அறிந்து  கொள்க
என்றவாறு. 

வரலாறு : 

‘குன்றத்து மேல குவளை குளத்துள
செங்கோடு வேரி மலர்’
 

என  வரும்.  இதனைக்,  குவளை  குளத்துள,  செங்கோடு வேரிமலர்
குன்றத்துள என மொழிமாற்றுக. 

மற்றுச்,   சுண்ணத்தோடு இதனிடை வேற்றுமை யென்னை யெனின்,
சுண்ணம்   ஈரடி   எண்சீருள்   அவ்வாறு  செய்யப்படும்  ;  இதற்கு
அன்னதோர் வரையறை யில்லை என்றவாறாம். (13) 

404. தநநு எஎனு மவைமுத லாகிய
கிளைநுதற் பெயரும் பிரிப்பப் பிரியா.
 

இச்சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், ஐயமறுத்தல் நுதலிற்று. 

உரை :  த  -  ந  -  நு  -  எ  எனச்  சொல்லப்பட்ட  நான்கு
எழுத்தினையும்   முதலாகவும்,   ன  -  ள  -  ர  என்னும்  மூன்று
எழுத்தினையும்   ஈறாகவும்   உடையவாகிய   தொடர்ச்சிக்   கிழமை
கருதிவரும்  பெயரவற்றைப் பிரித்து இடையறுத்து உணரலாங்கொல்லோ
எனின்,    அவை    பிரிப்பப்   பிரியா,   நின்றவாற்றானே   நின்று
பொருள்படினன்றி என்பது. 

வரலாறு : தமன் - தமள் - தமர் ; நமன் - நமள்- நமர் ; நுமன் -
நுமள் - நுமர் ; எமன் - எமள் - எமர் என வரும். 

உம்மையாற்  பிறவும் பிரிப்பப் பிரியாதன உள : அவை, தாய் ஞாய்
யாய்  என  வரும்.  வில்லி,  வாளி  என்பனவும்  பிறவும்  அவ்வாறு
வருவன  பிரிப்பப்  பிரியா  என்று  கொள்க.  இவை  ஒட்டுச்  சொற்
பொருளொடு  நிற்பன  என்றும்,  இவற்றை ஒருசொல் அன்று என்றும்
மயங்கற்க. ஒரு சொல்லே என்பது கருத்து. (14) 

405. இசைநிறை யசைநிலை பொருளொடு புணர்தலென்
றவைமூன் றென்ப வொருசொல் லடுக்கே.