இச்சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், இதுவும் வழக்கிற்கும் செய்யுட்கும் பொதுவாயதோர் முடிபு கூறுதல் நுதலிற்று.
உரை : ஒருசொல் பலகால் அடுக்கி மூன்று காரணமும்படச் சொல்லப்படும் என்றவாறு.
இசைநிறை எனவே, அது செய்யுள் இலக்கணம் என்பது போந்தது.
வரலாறு :
‘ஏஎஎஎ வம்பன் மொழிந்தனள்’
என வரும்.
ஒழிந்தன இரண்டும் வழக்கினுள் அடுத்துவரும்.
அசைநிலை :
‘ஒக்குமொக்கும்’
எனவும்,
‘மற்றோ மற்றோ’
எனவும் வரும்.
பொருளொடு புணர்தல் :
பாம்பு பாம்பு, கள்ளர் கள்ளர், படை படை, தீத்தீ எனவரும். அவற்றை இனத்தா லடுக்கிவரும் என்பதனை முன்னர்ச் சொல்லுதும். (15)
406.
வேற்றமைத் தொகையே யுவமத் தொகையே
வினையின் றொகையே பண்பின் றொகையே
யும்மைத் தொகையே யன்மொழித் தொகையென்
றவ்வா றென்ப தொகைமொழி நிலையே.
இச்சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், தொகைச்சொற்களைப் பெயரும் முறையும் தொகையும் உணர்த்துதல் நுதலிற்று.
பெயரும் முறையும் தொகையும் அதுவே. வேற்றுமைத் தொகையை முன்வைத்தார் அப்பகுதிப் படுமாகலான் ; அன்மொழித் தொகையைப் பின்வைத்தார் அஃது எல்லாவற்றையும் பற்றிப் பிறக்குமாகலான். (16)
407.
அவற்றுள்
வேற்றுமைத் தொகையே வேற்றுமை யியல.
இச்சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், நிறுத்து முறையானே வேற்றுமைத் தொகையது இலக்கணம் கூறுதல் நுதலிற்று.
உரை : வேற்றுமையுருபு தொக்குநின்ற தொகைச் சொற்கள் அவ்வுருபு இருந்தாங்கே பொருள்படும் என்றவாறு.
அவையாவன :
நிலங் கடந்தான், தாய் மூவர், கருப்பு வேலி, வரை வீழருவி, யானைக் கோடு, குன்றக் கூகை என
|