மேலும் தாலிமேலும் கிடவாது, பொற்றாலியுடையாள்மேல் நிற்கும், ஓசை வேறுபாட்டான் என்பது. இம் மூன்று தொகையும்பற்றிப் பிறத்தலின் ஓர் மிகுதிக்குறை யில்லை, ஒக்கும் என்றவாறு.
மற்றுத் தொகையதிகாரத்தின் முன்வைக்கப்பட்டதூஉம் சிறப்புடையதூஉம் வேற்றுமைத்தொகையாதலின், ஈண்டு இதனை முற்கூறாது, பண்புத்தொகை முற்கூறியது என்னை யென்னின், அதனாற் பிறவும் உள கொள்ளப்படுவன ; அவையாவையோ எனின், ஒழிந்துநின்ற உவமத் தொகையும் வினைத்தொகையும் பற்றிப் பிறக்கும் அன்மொழித்தொகை என்பது.
உவமத்தொகை பற்றிப் பிறந்தது :
அறங்கூந்தல் என்பது ; அது விரியுங்கால், அறல் போலுங் கூந்தல் என விரியும்.
வினைத்தொகை பற்றிப் பிறந்தது :
திரிதாடி என்பது ; அது விரியுங்கால், திரித்த தாடி என விரியும் ; அது தொக்குழி திரிவின்மேலும் தாடியின் மேலும் கிடவாது, திரித்ததாடி யுடையான்மேல் நிற்கும். இவை இரண்டும் வழக்குப் பயிற்சி ; அவைபோல அக்காலத்து இன்மையின், இலேசுபற்றி யெடுத்துக் கொண்டார் என்பது. (22)
413.
அவைதாம்
முன்மொழி நிலையலும் பின்மொழி நிலையலு
மிருமொழி மேலு மொருங்குட னிலையலு
மம்மொழி நிலையா தன்மொழி நிலையலு
மந்நான் கென்ப பொருணிலை மரபே.
இச்சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், இதுவும் அத் தொகைக்கண்ணே கிடந்ததோர் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று.
உரை : தொகுவன இருவகை மொழிகளான், அவ் விருவகை மொழியும் இருபொருளின்பின் றொக்கவிடத்து அவற்றைச் சொல்லு
|