து. (31)
422.
எவ்வயின் வினையு மவ்விய னிலையும்.
இச்சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், இது முற்றுச் சொல்லொழித்து ஒழிந்த பெயரெச்ச வினையெச்சங்கட்கு ஆவதோர் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று.
உரை : மேற் கூறப்பட்ட முற்றுச்சொல்லே யன்றிப் பெயரெச்சமும் மூன்றுகாலமும் மூன்றிடமும் உடையவாய் வினையும் வினைக்குறிப்பும்பற்றி வரும் என்பான், ‘எவ்வயின் வினையும் அவ்வியனிலையும்’ என்றான் என்பது.
மற்று,
‘வினையெனப் படுவது வேற்றுமை கொள்ளாது
நினையுங் காலைக் காலமொடு தோன்றும்’
(தொல். வினை-1)
என்புழி, எல்லா வினைச்சொல்லும் மூன்று காலத்திற்கும் உரிய எனப்பட்டது.
இனி,
‘எஞ்சிய கிளவி யிடத்தொடு சிவணி
யைம்பாற்கு முரிய’
(தொல். வினை-26)
என்புழி, எவ்விடத்திற்கும் உரிமையுங் கூறப்பட்டது பிறவெனின், மேல் அங்ஙனம் கூறினாரேனும், அது விலக்குப்பட்டது ; ஈண்டுப் போதந்து முற்றுச் சொல்லையே விதந்து மூன்றிடத்திற்கும் உரிய என்றமையான், அது நோக்கி யீண்டு இது கூறினார் என்பது. (32)
423.
அவைதாந்
தத்தங் கிளவி யடுக்குந வரினு
மெத்திறத் தானும் பெயர்முடி பினவே.
இச்சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், இது முற்றுச்சொல் என்று மேற்கூறப்பட்டனவற்றிற்கு முடிபுகூறுதல் நுதலிற்று.
உரை : மேற் சொல்லப்பட்ட முற்றுச் சொற்கடாம் எத்துணைச் சொல்லையும் அடுக்கிப் பலவாய்வரினும் பெயர் கொண்டு முடிதல் இலக்கணத்தன என்றவாறு.
வரலாறு : ‘உண்டான், தின்றான், ஓடினான், பாடினான், சாத்தன்’ என வரும் ; இது வினை.
‘நல்லறிவுடையன், செவ்வியன்
|