சான்றார்மகன்’ எனவும் வரும் ; இது வினைக்குறிப்பு.
மற்று, ‘எத்திறத்தானும்’ என்றது என்னை யெனின், உண்டான் சாத்தன் என்பது பெயரை முன்னடுத்து, சாத்தன் உண்டான் என்பது பெயரைப் பின்னடுத்து வரும் என்பது அறிவித்தற்கு, ‘எத்திறத்தானும்’ என்றார் என்பது. பிறவுஞ் சொல்லுப ; முன்னுமுரிய முற்றுச் சொல்லென என்பது. (33)
424.
பிரிநிலை வினையே பெயரே யொழியிசை
யெதிர்மறை யும்மை யெனவே சொல்லே
குறிப்பே யிசையே யாயீ ரைந்து
நெறிப்படத் தோன்று மெஞ்சுபொருட் கிளவி.
இச்சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், மேல் வினையியலுள்ளும் இடைச்சொல் லுள்ளும் முடிபு கூறப்படாது நின்ற எச்சங்கட்கு முடிபு உணர்த்துவான் தொகுத்து உணர்த்துதல் நுதலிற்று.
உரை : எல்லாவற்றையும் எச்சம் என்பதனைக் குறைத்துப் பின்னைப் பெயரெஞ்சு கிளவி யென்றார், இறுதி விளக்காக. பிரிநிலையெச்சம் முதலாகக் கூறப்பட்ட பத்து வகை யெச்சங்களும் முன்பு முடிவு கூறப்படாது நின்றன மேனும், இனி நெறிப்படத் தோன்றும் அவை என்றவாறு. (34)
425.
அவற்றுள்
பிரிநிலை யெச்சம் பிரிநிலை முடிபின.
இச்சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், நிறுத்த முறையானே பிரிநிலையெச்சத்திற்கு முடிபு உணர்த்துதல் நுதலிற்று.
உரை :
பிரிநிலையென்ப இருவகைய, ஏகாரப் பிரிநிலையும் ஓகாரப் பிரிநிலையும் என ; அவை பிரிக்கப்பட்ட பொருடன்னையே கொண்டுமுடிக என்றவாறு.
வரலாறு : ‘அவனே கொண்டான்’ ‘அவனோ கொண்டான்’ என வரும். அவனே யெனப் பிரிநிலையெச்சம் ஏகாரந்தானின்றுமன், அவனே யெனப் பிரிக்கப்பட்டானையே கொண்டுமுடிதல் ; இவை அவற்றுக்கு முடிபாவன என்றவாறு. (35)
426.
வினையெஞ்சு கிளவிக்கு வினையுங் குறிப்பு
நினையத் தோன்றிய முடிபா கும்மே
யாவயிற் குறிப்பே யாக்கமொடு வருமே.
|