இச்சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், நிறுத்த முறையானே வினையெச்சத்திற்கு முடிபு கூறுதல் நுதலிற்று.
உரை : வினையெச்சம் முடியுங்கால் வினையும் வினைக்குறிப்புங் கொண்டு முடியும் ; அவ்விடத்துக் குறிப்புவினைச்சொல் ஆக்கச்சொல்லொடு வரும் என்றவாறு.
வரலாறு : ‘உழுது வந்தான்’ என்பது, வினையெச்சம் தெரிநிலை வினைகொண்டு முடிந்தது. ‘மருந்து உண்டு நல்லனாயினான்’ என்பது, வினையெச்சம் வினைக்குறிப்புக் கொண்டு முடிந்தது ; அவ்விடத்து வினைக்குறிப்பு ஆக்கமொடு வந்தவாறு கண்டுகொள்க.
இனி, ‘நினையத் தோன்றிய’ என்றதனான், ‘உழுது வருதல்’ ‘உழுது வந்தான்’ எனத் தொழிற்பெயரானும் முடியும் என்றவாறு.
மற்று, இச் சூத்திரத்தால் வினையெச்சத்திற்கு முடிபு கூறவேண்டியது என்னை? வினையியலுள்,
‘முதனிலை மூன்றும் வினைமுதல் முடிபின’
(தொல். வினை-31)
என்றும், ஒழிந்தனவற்றுக்கு,
‘ஏனை யெச்சம் வினைமுத லானும்
ஆன்வந் தியையும் வினைநிலை யானும்’
(தொல். வினை-33)
முடியுமென்றுங் கூறியதே அமையும் பிறவெனின், அதற்கு விடை, ஆண்டு, வினைமுதலானும் முடியுமென்புழிப் பெயர் வினைமுதலானும் முடியும் என்பது பட்டது ; என்னை, வினை வினைமுதலென்றும், பெயர் வினைமுதல் என்றும் பகராது, பொதுவகையாற் கூறினாராகலின் இச் சூத்திரம் வேண்டும் ; இது கூறாக்கால், உழுது சாத்தன் எனப் பெயர் வினைமுதலானும் முடிவான் செல்லும் என்பது. அன்றியும், வினையெச்சத்திற்கு வினைக்குறிப்பு முடிபாங்கால், ஆக்கமொடுவருதல் எடுத்தோத வேண்டும் என்பது.
427.
பெயரெஞ்சு கிளவி பெயரொடு முடிமே.
இச்சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், நிறுத்த முறையானே பெயரெச்சத்திற்கு முடிபுகூறுதல் நுதலிற்று.
உரை : பெயரெச்சம் பெயர்கொண்டு முடியும் என்றவாறு.
வரலாறு : ‘உண்ணுஞ் சாத்தன்’ ‘உண்ட சாத்தன்’ என
|