இளம்பூரணர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   1321
Zoom In NormalZoom Out


ண்ணாநின்றான்,     சோறும்    உண்பன்’    என    வரும்.
‘கூழுண்ணாநின்றான்’ என்பது செஞ்சொல்; ‘சோறும் உண்பன்’ என்னும்
உம்மைச் சொல்லின்மேல் வந்தது. 

உண்ணாநின்றான்     என்னும்  நிகழ்காலம்  தன்னிகழ்காலமே
கொள்ளாது, ‘சோறும் உண்பன்’ என்னும் எதிர்காலங் கொண்டமையின்
வழுவாயிற்றாயினும், அமைக என்பது. 

இறந்தவும் எதிர்வும்  மயங்குமாறு:  ‘கூழுண்டான்  சோறுமுண்பான்’
என வரும். 

இனி,  ‘முறை   நிலையான’     என்றதனான்,    இறந்ததனொடு
நிகழாநின்றதூஉம்  மயங்கும்;  எதிர்வதனோடு  இறந்ததுவும் மயங்கும்
என்றவாறு. 

வரலாறு : ‘கூழுண்டான், சோறும் உண்ணாநின்றான்’  என  வரும்;
‘சோறுண்பான், கூழுமுண்டான்’ எனவரும்; பரிமாறிக் கொள்க. (41) 

432. எனவெ னெச்சம் வினையொடு முடிமே. 

இச்சூத்திரம்    என்னுதலிற்றோ   வெனின்,   நிறுத்த   முறையானே
எனவென் னெச்சத்திற்கு முடிபு உணர்த்துதல் நுதலிற்று. 

உரை : எனவென நின்ற எச்சம்  பெயர்கொண்டு முடியாது  வினை
கொண்டு முடியும் என்றவாறு. 

வரலாறு : ‘கொள்ளெனக் கொண்டான்’ என வரும். பிறவும் அன்ன. 

தன்வினையையோ     பிறவினையையோ     எனின்,     இன்ன
வினையென்பதில்லை, ஏற்ற வினையான் முடியும் என்பது. () 

433. எஞ்சிய மூன்று மேல்வந்து முடிக்கு
மெஞ்சுபொருட் கிளவி யிலவென மொழிப.
 

இச்சூத்திரம்     என்னுதலிற்றோ    வெனின்,   சூழிந்து   நின்ற
எச்சங்கடிறத்துப் படுவதோர் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று. 

உரை :  எஞ்சி  மூன்றும்  என்பன,  அவை  மூன்றும்;  முந்தைய
வற்றைப்போலத்  தம்மை  யின்னவந்து முடிப்பன என்று காட்டப்படும்
எச்சச்சொல் இல்லை என்றவாறு. 

மூன்றும் மேல்வந்து  முடிக்கும்  எச்சச்சொல்  இல  என,  ஒன்று
உடைத்தென்பதாம். அஃ