இளம்பூரணர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   1322
Zoom In NormalZoom Out


தியாதோவெனின்     சொல்லெச்சம்     ;    அதனை    முன்னர்ச்
சொல்லுதும். (43)

434. அவைதாம்
தத்தங் குறிப்பி னெச்சஞ் செப்பும்.
 

இச்சூத்திரம்   என்னுதலிற்றோ  வெனின்,  இது  ‘குறிப்பே  இசையே’
(தொல்.  சொல்.  எச்சவி-  34)  யென்று  கூறப்பட்ட இரண்டெச்சமும்
தங்குறிப்பிற்பற்றிய   எச்சத்தானே   முடிபு   கூறப்படும்,  பிறிதில்லை
என்பது. 

வரலாறு : ‘விண்ணென  விசைத்தது’  குறிப்பெச்சம் ; அது  தன்
குறிப்பினையே கொண்டு முடிந்தது. 

விண்ணென்றதே  விசைத்தது   எனப்பட்டது.    அதனால்   தன்
குறிப்பினையே கொண்டு முடிந்தது. 

இனி, இசையெச்சம், ஒல்லென வொலித்தது. இடைச் சொல்லோத்துள்
அறுபகுதிய  என்று  ஓதப்பட்ட,  ‘என’  விகற்பித்து  இரண்டு  முடிபு
கூறப்பட்ட தென்பது. மற்று ஆண்டுச் சொல்லெச்சம் என்பதில்லையால்
எனின், விடை, 

‘எனவெ னெச்சம் வினையொடு முடிமே’
                       (தொல். சொல். எச்சவி - 12)
 

என்று   முடித்தார்.  வினையென  வினை   பின்னுந்   தன்கண்ணதே
சொல்லெச்சம்,  அதுகொண்டு  முடிதல் இவ்வாய்பாடு, அவ் வேற்றுமை
நோக்கி வேறு சொல்லெச்சம் என வேண்டினார் என்பது. 

முன்னர்  மூன்று  மேல்வந்து  முடிக்கும். எஞ்சு பொருள்கிளவியில்
என,   ஒன்று   உடைத்து   என்பது  பட்டுநின்றது  ;  அஃதியாதோ
சொல்லெச்சம் என்பது. 

இனி, அதற்கு முடிபு கூறுகின்றார். (44) 

435. சொல்லெ னெச்ச முன்னும் பின்னுஞ்
சொல்லள வல்ல தெஞ்சுத லிலவே.
 

இச்சூத்திரம்   என்னுதலிற்றோ  வெனின்,  சொல்லெச்சத்திற்கு  முடிபு
கூறுதல் நுதலிற்று. 

உரை  :    சொல்லெனெச்சம்    முன்னாயினும்    பின்னாயினும்
சொல்லென்னுஞ் சொற்கொண்டு முடிதலல்லது பிறிதில்லை என்றவாறு. 

வரலாறு :  ‘பசித்தேன் பழஞ்சோறு தா என நின்றாள்’ என்பதாம். 

‘மற்றுத்  தா  என   நின்றாள்  பிறளேயெனின்,    தா    எனச்சொல்லிநின்றாள் என்பதாம்.