‘மந்திரப் பொருள்வயி னாஅகுநவும்’ என்பது ;
‘நிறைமொழி மாந்த ராணையிற் கிளந்த
மறைமொழி தானே மந்திர மென்ப’
(தொல். பொருள். செய்யு - 171)
அவை, கூறப்பட்ட எழுவகை வழுவிற்றீர்ந்து வருக என்ற கடப்பாடில என்றவாறு.
அவை,
‘திரிதிரி சுவாகா கன்று கொண்டு
கறவையும் வத்திக்க சுவாகா’
என்றாற்போல வரும்.
இச்சூத்திரத்திற்குப் பிறிதுமோர் பொருள் உரைப்பாரும் உளர். இதுவும் மெய்யுரை போலும் என்பது. ()
444.
செய்யா யென்னு முன்னிலை வினைச்சொல்
செய்யென் கிளவி யாகிட னுடைத்தே.
இச்சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், இது வினையியலுள் ஒழிந்துநின்ற ஒழிபு உணர்த்துதல் நுதலிற்று.
உரை : செய்யாய் என நின்ற முன்னிலை வினைச்சொல் செய் யென்னுஞ் சொல்லும் ஆமிடன் உடைத்து என்றவாறு.
‘இந்நாள் எம்மில்லத்து உண்ணாய்’ என்பது ; அது செய்யாய் என்பது, அதுசெய் இனி என்றுமாம். (54)
445.
முன்னிலை முன்ன ரீயு மேயு
மந்நிலை மரபின் மெய்யூர்ந்து வருமே.
இச்சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், இடைச்சொல்லோத்தினுள் ஒழிந்து நின்ற ஒழிபு உணர்த்துதல் நுதலிற்று.
உரை : ன்னிலைக்கண்ணான ஈகார ஏகார இடைச்சொற்கள் முன்னிலைக்குப் பொருந்திய மெய்யை யூர்ந்து வரும் என்றவாறு.
வரலாறு :
‘சென்றீ பெருமநிற் றகைக்குநர் யாரோ’ (அகம் - 46)
எனவும்,
‘அட்டி லோலை தொட்டனை நின்மே’ (நற்றிணை - 300)
எனவும், இவை யிரண்டும் தத்தங் குறிப்பிற் பொருள் செய்யும் இடைச்சொல் என்பது ; ஈண்டு எப்பொருளை விளக்கி நின்றனவோ எனின், புறத்துறவு நீர்மைப் பொருள்பட வந்த என்றவாறு. (55)
446.
கடிசொல் லில்லைக் காலத்துப் படினே.
இச்சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், மேற் கூறப்பட்ட அவற்றுக்கெல்லாம் பொதுவாயதோர் புறனடை உணர்த்துதல் நுதலிற்று.
வரலாறு : அழான், பு
|