பெயர்க்கண்ணதே யென்பது பெற்றாம்.
மற்றுச்,
‘சென்றா ரன்பில தோழி’
என, அன்பிலர் எனற்பாலார், அன்பில என்றார் ; எனவே, வினைச்சொல்லுங் குறைக்கப்பட்டதெனின், ‘நிறைப்பெயரியல’ என்றது, பெயர்ச்சொல் என்றவாறு. அக் குறைக்கப் பெறுவன அம் மூன்றிடத்துள் எவ்விடத்துங் குறைக்கப் பெறினும் பெறுக.
பெற்றன குறையாதபோது நின்ற தத்தம் நிறைபு நிலைப்பெயரவேயாக வுணரப்படும் என்பார், ‘நிறைப்பெயரியல’ என்றார் என்பது ; இதுவும்
ஒரு கருத்து. (57)
448.
இடைச்சொல் லெல்லாம் வேற்றுமைச் சொல்லே.
இச்சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், இடைச்சொல் எனப்பட்டன அவற்றுக்கட் படுவதோர் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று.
உரை: முன்னர் வேற்றுமை யோத்தினுள் ஐ ஒடு கு இன் அது கண் என்னும் உருபுகளையன்றே வேற்றுமைச் சொல்லென்று உணர்த்தியது ; இனி அவையன்றி ஒழிந்த இடைச்சொற்களையும் வேற்றுமைச்சொல் என அமையும் என்றவாறு.
என்னை, அவையும் தாமாக நில்லா, பெயரும் தொழிலும் அடைந்து நின்றும் அவற்றையே பொருள்வேற்றுமைப் படுக்குமாகலின் என்பது. (58)
449.
உரிச்சொன் மருங்கினு முரியவை யுரிய.
இச்சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், உரிச்சொற்கடிறத்துப்படுவதோர் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று.
உரை : இடைச்சொல் லெல்லாம் வேற்றுமைச் சொல்லாதற்கு எவ்வாறுரியவாயினமன், அவ்வுரிமை உரிச்சொற்கண்ணும் எய்தும் என்றவாறு.
உம்மை இறந்தது தழீஇயிற்று. உரிச்சொல் லெல்லாம் வேற்றுமைச்சொல் என்றது மேற்கூறிய இடைச்சொல்லேபோல உரிச்சொல்லும் தாமாக நில்லா, பெயரும் வினையும் அடைந்து பொருள்வேறுபடுதலுடைய, அது நோக்கி யெ
|