ன்பது. இருதலையாக அவற்றை வேற்றுமைச் சொல் என்றவாறு. (59)
450.
வினையெஞ்சு கிளவியும் வேறுபல் குறிய.
இச்சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், முன்னர் வினையியலுள் வினையெச்சம் என்று ஓதப்பட்டனவற்றுக்கண் ஆவதோர் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று.
உரை : வினையெச்சம் என்று கூறப்பட்டன செய்யுட் கட்டாம்வந்து முடிபு கொண்டதன் றன்மைப்பாலேநில்லா ; நின்றாற் பொருளிசையாவாதலால், ஓர் எச்சந்திரிந்து ஓர் எச்சமாகியும் நிற்கும் இலக்கணத்தினையுடைய என்றவாறு.
வரலாறு : ஞாயிறு பட்டு வந்தான், ஞாயிறு பட வந்தான் என்பதுமன் ஆகற்பாலது.
பட என்பது செயவெனெச்சம் ; அது திரிந்து பட்டு என்னுஞ் செய்தெனெச்சமாகி நின்றதென்பது.
‘கோழிகூவிப் புலர்ந்தது’
என்பதூஉம் செயவெனெச்சஞ் செய்தெனெச்சமாகித் திரிந்து நின்றது என்பது.
அங்ஙனம் நின்றவேனும், அவற்றைச் செயவெனெச்சமாக வுணர்ந்துகொளல் வேண்டும், அல்லாக்காற் சொன்முடிபு எய்தாது. என்னை, ‘ஞாயிறு பட்டு’ என்றக்கால், வந்தான் என்றலும் முடியற்பாலது. பின்னும் ஞாயிற்றின்மேல் வினைகொண்டு முடியற்பாற்று,
‘முதனிலை மூன்றும் வினைமுதல் முடிபின’
(தொல். சொல். வினை - 31)
என்று உரைத்தாராகலின் என்பது. கோழி கூவப் புலர்ந்தது என்பதற்கும் அஃது ஒக்கும்.
இனி,
‘மோயின ளுயிர்த்த காலை’
(அகம் - 5)
என்புழி, மோந்து என்னும் வினையெச்சம், மோயினள் என முற்றுச்சொல் வாய்பாட்டாற் றிரிந்து நின்றதேனும், வினையெச்சமே யாகல்வேண்டும். பிறவும் அன்ன.
பிற என்றதனால்,
‘ஏரி னுழாஅ குழவர் புயலென்னும்
வாரி வளங்குன்றிக் கால்’ (குறள். வான்சிறப்பு - 4)
என்பது, குன்றியக்கால் என்னும் வினையெச்சம் குன்றிக்கால் என நின்ற
|