இளம்பூரணர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   1333
Zoom In NormalZoom Out


ய்யுள்  விதியுடைத்தொன்றாதலானும்  அதனை  யமைக்க  வேண்டும்,
அதனாற் சொல்லினார் அதற்கே வரைந்து என்பது. 

மற்று,   ஆற்றுப்படை   மருங்கினானே   யமையாது   ‘போற்றல்
வேண்டும்’  என்பதனாற் பிறவும் உள ஈண்டுப் போற்றி யுணரப்படுவன
என்பது. 

‘நில்லாது பெயர்ந்த பல்லோ ருள்ளு
மென்னையே குறித்த நோக்கமொடு’
 

என்புழித்,    தானும்    அன்னாருள்ளாராகலின்    பல்லேமுள்ளேம்
எனற்பாற்றுமன், ஆயினும் அஃது அமைக என்பது. 

இனி, 

‘ஏவ லிளையர் தாய்வயிறு கரிக்கும்’ 

எனற்பாற்றுமன்,  ஆயினும்   அமைக   என்பது.   மற்று   இளையர்
பல்லாரையுமுடைய   தாயைச்   சொல்லிற்றாகப்   பெறாதோ  எனின்,
அற்றன்று,   ஆண்டு   ஆண்  பூசலாட்களாகலான்  அவர்க்கெல்லாம்
ஒருதாயாத லியைபின்று என்பது. இனி, ஒரு சாரார், 

‘கறையணி மிடற்றினை’ 

என்னும்  முன்னிலை  யொருமை,  கறையணி  மிடற்றினவை என்னும்
அஃறிணைப்   படர்க்கைப்  பன்மையானும்  முடிந்ததென்று  காட்டுப.
இனிக்,  ‘கறையணி  மிடற்றினவை’  என்றது, அத்தேவனார் கூளிகளை
என்ப  ஒரு  திறத்தார்  ;  அற்றன்று. பின்னையனைய யாதலின் அத்
தேவனார்  தம்மே லேறுமாகலின் அமைக்க வேண்டுமென்பர் முன்னை
யுரைப்பார்    ;   பிறவுமிவ்வாறு   வருவன   போற்றி   யுணரப்படும்
என்றவாறு. (65) 

456. செய்யுள் மருங்கினும் வழக்கியன் மருங்கினு
மெய்பெறக் கிளந்த கிளவி யெல்லாம்
பல்வேறு செய்திபி னூனெறி பிழையாது
சொல்வரைந் தறியப் பிரித்தனர் காட்டல்.
 

இச்சூத்திரம்    என்னுதலிற்றோ    வெனின்,     இவ்வதிகாரத்து
எடுத்தோத்தே  இலேசேயன்றி  இவ்வாற்றான் முடியாது நின்றனவற்றுக்
கெல்லாம் புறனடை உணர்த்துதல் நுதலிற்று. 

உரை  :   செய்யுளிடத்தும்    வழக்கிடத்தும்   முன்னரே  முடிபு
கூறப்படாது   நின்ற   சொற்கள்  இவை  என்று  தெரிந்து  அவற்றை
உத்திவகை இலக்கணத்தோடு படுத்திக் காட்டுக என்றவாறு. 

வரலாறு : 

‘தினைத்தா ள