இளம்பூரணர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   1334
Zoom In NormalZoom Out


 

ன்ன சிறுபசுங் கால
ஒழுகுநீ ராரல் பார்க்குங்
குருகு முண்டுதா மணந்த ஞான்றே’

(குறுந் - 25)
 

என்புழிச்,   ‘சிறுபசுங்கால’   என்று   பன்மையாற்  கூறிப், பின்னைக்,
‘குருகுமுண்டு’  என்று  ஒருமையாற்  கூறுதல் வழுவாயிற்று ; ஆயினும்
அமைக என்பது.
 

‘இரண்டனுட் கூர்ங்கோட்ட காட்டுவல்’
 

என்புழிக்,  கூர்ங்கோட்டது எனற்பாற்று. என்னை, இரண்டனுள் என்றாற்
பின்னை ஒன்றேயாகலின் என்பது. ஆயினும் அமைக என்பது.
 

இனி, வழக்கினுள் எம்முளவனல்லன் நும்முளவனல்லன் என்னும்.
 

பிறவும் இவ்வாறு இடவழுப்பட வருவன அமைத்துக்கொள்க.
 

இனி,   ஒரு சாரார்,   சம்பு   சள்ளை  சத்தி  என்பன  ஈண்டுக்
காட்டுவாரும் உளர்.
 

பிறவும்   முடியாது   நின்றனவெல்லாம்   இதுவே  விதியோத்தாக
முடித்துக்கொள்க என்பது. (66)
 

ஒன்பதாவது எச்சவியல் முற்றிற்று.
 
சொல்லதிகாரமும் உண்மைப்பொருளும்
வரலாறும் முடிந்தன.