ணன்று’ என்றற்கு
‘ஆண்மை திரிந்த’ என்றார். இரண்டு இடத்துப்
பெயர்நிலைக் கிளவியும் சொல்லினான்
பொருள் அறியப்படுதலின்
ஆகுபெயராய் அப் பொருளுணர்த்திநின்றன.
‘சுட்டிய’
என்பது, ‘நிலம் பூத்த மரம்’ (கலி, 27:9) என்பது போலும்
பெயரெச்சம், அது , ‘பெயர்நிலைக்கிளவி’
என்பதனொடு முடியும்.
‘ஆண்மை திரிந்த’ என்பது,
இடைநிலை. இதன் பொருள்,
ஆண்பாற்குரிய ஆளுந் தன்மை
முற்பிறப்பின் தான் செய்த
தீவினையான் தன்னிடத்து இல்லையான பெயர்ப்பொருளென்க. என்றது,
‘நல்வினை செய்யாத பொருள்’ என்றவாறு. இதற்குப் பெண்மை திரிதல்
உண்டேனும் ஆண்மை திரிதல் பெரும்பான்மை.
பால்
பிரிந்திசைத்தலாவது, தாம் உயர்திணைப்
பொருளாய்
அவற்றின் ஈற்றினான் இசைத்தலாம்.
பேடியைப் பாலுள்ளும் தெய்வத்தைத் திணையுள்ளும் அடக்கினார்.
(எ-டு.) பேடி
வந்தாள், பேடியர் வந்தார், தேவன் வந்தான், தேவி
வந்தாள், தேவர் வந்தார் என வரும்.
பேடியர்,
பேடிமார், பேடிகள் என்பனவும் அடங்குதற்குப் ‘பேடி’
என்னாது, ‘ஆண்மை திரிந்த’ என்றார்.
‘பெண்அவாய் ஆண்இழந்த பேடி அணியாளோ?’
(நாலடி 251)
என்பதனான் பேடி பெண் அவாய் நிற்றல் கொள்க.
‘அந்தம்
தமக்கு இல,’ என்றதனான், நிரயப்பாலர், அலி, மகண்மா
முதலியவற்றையும் இம்மூவீற்றின் ஏற்பதனான் முடிக்க.
(எ-டு.) நரகன்
வந்தான், நரகி வந்தாள், நரகர் வந்தார், அலி
வந்தான், அலியர் வந்தார், மகண்மா வந்தாள் என வரும். (4)
ஆண்பால் ஈறு
5. னஃகான் ஒற்றே ஆடூஉ அறிசொல்.
இஃது ஆடூஉஅறிசொல்
உணர்த்துகின்து.
(இ-ள்.)
னஃகான் ஒற்று - னஃகானாகிய ஒற்றினை ஈறாக உடைய
சொல், ஆடூஉஅறிசொல் - ஒருவன் ஆண்மகனை அறியும் சொல்லாம்,
எ-று.
ஏகாரம் தேற்றேகாரம்.
(எ-டு.) உண்டனன்,
|