நச்சினார்க்கினியர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   483
Zoom In NormalZoom Out


உண்டான்; உண்ணாநின்றனன், உண்ணாநின்றான்; உண்பன், உண்பான்;
கரியன், கரியான் என வரும். 

‘உண்டான்’    என்புழி    னகரம்   ஒழிந்த   மூவெழுத்துக்களும்
ஏனைப்பாற்கும் வருதலின், னகரத்தின் சிறப்புநோக்கி, ‘னஃகான் ஒற்றே
என்றார். ‘அன்,  ஆன்’ என்னும் இரண்டனையும் தொகுத்து ‘னஃகான்’
என்றார். மேலனவற்றிற்கும் இஃது ஒக்கும். (5) 

பெண்பால் ஈற்று

6. ளஃகான் ஒற்றே மகடூஉ அறிசொல். 

இது மகடூஉ அறிசொல் உணர்த்துகின்றது. 

(இ-ள்.)  ளஃகான்  ஒற்று - ளஃகானாகிய ஒற்றினை ஈறாக உடைய
சொல்,  மகடூஉஅறிசொல் - ஒருவன் மகடூஉவினை அறியும் சொல்லாம்,
எ-று. 

(எ-டு.)       உண்டனள்,     உண்டாள்;     உண்ணாநின்றனள்,
உண்ணாநின்றாள்;  உண்பள்,  உண்பாள், கரியள்; கரியாள் என வரும்,
(6) 

பலர்பால் ஈறு

7. ரஃகான் ஒற்றும் பகர இறுதியும்
மாரைக் கிளவி உளப்பட மூன்றும்
நேரத் தோன்றும் பலரறி சொல்லே.
 

இது பலர் அறிசொல் உணர்த்துகின்றது. 

(இ-ள்.) ரஃகான்  ஒற்றும் -  ரஃகானாகிய ஒற்றினை ஈறாக உடைய
சொல்லும்,  பகர  இறுதியும் - பகரமாகிய இறுதியை உடைய சொல்லும்,
மாரைக்  கிளவி  உளப்பட  மூன்றும் - மார் என்னும் இடைச்சொல்லை
ஈறாக  உடைய  சொல் உட்பட மூன்றும், நேரத் தோன்றும் பலர் அறி
சொல்லே-நிரம்பத் தோன்றும் பலரை அறியும் சொல்லாம், எ-று. 

‘அகரத்தொடு  புணர்ந்த  பகரம்  அல்லது உயர்திணைப்பன்மையை
உணர்த்தாது,’  என்றற்கு  ஈண்டுப்  ‘பகரம்‘ என்றும், மேல் ‘அ ஆ வ’
என்றும்,  பகர  வகர  உயிர்மெய் ஈறாய்நிற்றல் உடம்பொடு புணர்த்துக்
கூறினாரா