உண்டார் அவள்,
உண்டது அவை, உண்டன அது -இவை பால் வழு.
இவை வினை நின்று பெயர்மேல் வழீஇயின.
அவன்
வந்தது, அவன் வந்தன, அவள் வந்தது, அவள் வந்தன,
அவர் வந்தது, அவர் வந்தன, அது வந்தான், அவை வந்தான், அது
வந்தாள், அவை வந்தாள், அது வந்தார், அவை வந்தார்-இவை
திணை
வழு.
அவன் வந்தாள், அவன் வந்தார், அவள் வந்தான், அவள் வந்தார்,
அவர் வந்தான், அவர் வந்தாள், அது வந்தன, அவை வந்தது-இவை
பால் வழு. இவை பெயர் நின்று வினைமேல் வழீஇயின.
செத்தானைச்
‘சாம்’ என்றல் கால வழு.
யான் உண்டான், யான் உண்டாய் என்றாற்போல்வன இட வழு.
இவை பெயர் வினைகளைப்பற்றி வரும் விகற்பமும் கொள்க.
யானை
மேய்ப்பானை இடையன் என்றலும், யாடு மேய்ப்பானைப்
பாகன் என்றலும் மரபு வழு.
செப்பும்
வினாவும் வழுவாமையும், வழுவுமாறும் மேலே கூறுப.
வினையியலுள் கடைக்கண் கால வழுவமைதியும்,
மரபியலுள் மரபு
வழுவமைதியுங்கூறி, ஏனைய வழீஇ அமையுமாறு
இவ்வோத்தினுள்
கூறுப. (11)
பேடி என்னுஞ் சொல் ஆண்பாலொடு பொருந்தாமை
12.
ஆண்மை திரிந்த பெயர்நிலைக் கிளவி
ஆண்மை அறிசொற் காகிடன் இன்றே.
இதுவும் அது.
(இ-ள்.)
ஆண்மை திரிந்த பெயர்நிலைக்
கிளவி -‘உயர்திணை
மருங்கிற் பால்பிரிந் திசைக்கும்’
என மேற்கூறிய ஆண்மை திரிந்த
பெயர்ச்சொல், ஆண்மை அறி சொற்கு ஆகு இடன் இன்று - ஆடூஉ
அறிசொல்லொடு பொருந்தும் இடனுடைத்தன்று, எ-று.
இது ‘வழுவற்க’, என்கின்றது ஆகலின்,
|