ஈண்டுப் போதந்து வைத்தார். (12)
வினாவும் விடையும் வழுவலாகாமை
13. செப்பும் வினாவும் வழாஅல் ஓம்பல்
இதுவும் அது.
(இ-ள்.) செப்பும் வினாவும்-வினாய பொருளை அறிவுறுப்பதனையும்,
அறியலுறவு வெளிப்படுப்பதனையும், வழாஅல்
ஓம்பல் - வழுவாமல்,
போற்றுக, எ-று.
‘செவ்வன்
இறை’யும், ‘இறை பயப்பது’வும் எனச்
செப்பு இரு
வகைத்து, அவற்றுள் இறை பயப்பனதாம்,
வினாவெதிர் வினாவலும்,
ஏவுதலும், மறுத்தலும், உற்றதுரைத்தலும்,
உறுவது கூறலும்,
உடம்படுதலும், சொல் தொகுத்திறுத்தலும்,
சொல்லாதிறுத்தலும் என
எண்வகைய. ‘உயிர்
எத்தன்மைத்து?’ என்று வினாயவழி,
‘உணர்தற்றன்மைத்து’, என்றல்
செவ்வன் இறையாம். ‘உண்டியோ?’
என்று வினாயவழி, ‘வயிறு குத்திற்று,’ என்றல், உற்றது உரைத்தலாய்
‘உண்ணேன்,’ என்பது பயத்தலின் இறை
பயப்பதாம். ‘கடம்பூர்க்கு
வழியாதோ?’ எனின், ‘இடம் பூணி என் ஆவின் கன்று,’ என்றல் செப்பு
வழுவாம்.
அறியான்
வினாவும், ஐய வினாவும், அறிபொருள் வினாவும் என
வினா மூவகைத்து, ‘உயிர் எத்தன்மைத்து?’ என்றல் அறியான் வினா.
ஒரு வாற்றானும் அறியப்படாத பொருள் வினாவப்படாமையின், பொது
வகை யான் உணர்ந்து, சிறப்பு வகையான் அறியாமையின் வினாவினான்
என்று உணர்க. ‘குற்றியோ மகனோ தோன்றுகின்ற உருவு!’ என்பது ஐய
வினா. அறியப்பட்ட பொருளை வேறு
அறிதலும் அறிவுறுத்தலும்
முதலிய பயன் நோக்கி வினாதல் அறிபொருள் வினா. இவ் வறிபொருள்
வினாவின் கண்ணே அறிவு ஒப்புக்
|