நச்சினார்க்கினியர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   494
Zoom In NormalZoom Out


என்றவழி, மெலிதாயது  வலிதாய் வேறுபட்டது என ஆக்கம் வேறுபாடு
குறித்து நிற்றலின், இயற்கைப் பொருள் ஆக்கமொடு வந்ததன்றாம். (19) 

செயற்கைப் பொருள்மேல் மரபு வழாமை

20. செயற்கைப் பொருளை ஆக்கமொடு கூறல்.  

இதுசெயற்கைப் பொருள்மேல் மரபு வழுவாமை கூறுகின்றது.  

(இ-ள்.) செயற்கைப்   பொருளை  - காரணத்தான் தன்மை திரிந்த
பொருளைத்   திரிபு   கூறுங்கால்,  ஆக்கமொடு  கூறல்  -  ஆக்கங்
கொடுத்துச் சொல்லுக, எ-று. (20) 

மேலதற்கு ஒரு புறனடை

21. ஆக்கந் தானே காரண முதற்றே.
இது மேலதற்கு ஒரு புறனடை.
 

(இ-ள்.)   ஆக்கந்தானே  -  செயற்கைப்பொருளை   ஆக்கமொடு
கூறுங்கால்  அவ்வாக்கச் சொற்றான், காரண முதற்று-காரணச் சொல்லை
முன்னாக உடைத்து, எ-று. 

(எ-டு.) கடுக்கலந்த கைபிழி எண்ணெய் பெற்றமையான் மயிர் நல்ல
வாயின,   எருப்பெய்து   இளங்களை   கட்டு  நீர்கால் யாத்தமையான்
பைங்கூழ் நல்லவாயின என வரும். 

‘மயிர்  நல்ல;   பைங்கூழ்  நல்ல,’   என   ஆக்கமின்றி  வந்தது,
பொருட்குப்    பின்    தோன்றாது,   உடன்   தோன்றி   நிற்றலின்
இயற்கைப்பொருளாம்.    அவ்வாறன்றி,    முன்    தீயவாய்ப்   பின்
நல்லவாயினவழி,   அத்தீமை  காணாதான்,  ‘மயிர்  நல்ல,’  எனினும்
இழுக்கின்று, அச்செயற்கை உணராமற் கூறலின். (21) 

எய்தியது விலக்கல்

22. ஆக்கக் கிளவி காரணம் இன்றியும்
போக்கின் றென்ப வழக்கி னுள்ளே.
 

இஃது எய்தியது வி