தான் அறிபொருள்
வயின் பன்மை கூறல் -
தான் அறிந்த
உயர்திணைப் பொருளிடத்துப் பன்மையாற் கூறுக, எ-று.
ஐயப்பொருளாவது,
சிறப்பியல்பான் தோன்றாது பொது இயல்பான்
தோன்றிய பொருள்.
‘ஆண்மகன்கொல்லோ
பெண்டாட்டிகொல்லோ தோன்றுகின்றவர்!’
என வரும்.
‘திணைவயின்’
என்னாது, ‘தான் அறி பொருள்வயின்’ எனப்
பொதுப்படக் கூறிய அதனான், ‘ஒருவன் கொல்லோ பலர்கொல்லோ
இக் கறவை உய்த்த கள்வர்? ஒருத்திகொல்லோ பலர்கொல்லோ இக்
குருக்கத்தி நீழல் வண்டல் அயர்ந்தார்?’ எனத் திணையோடு ஆண்மை
பெண்மை துணிந்த பன்மை ஒருமைப் பால்ஐயமுங் கொள்க.
அப்பொருட்கு இரு பாலுமாய் நிற்றல் இன்மையின், தான் ஒன்றாகிய
பொருளைப் பன்மையாகக் கூறினும் அமைக என வழுவமைத்தார். (23)
இதுவும் அது
24.
உருவென மொழியினும் அஃறிணைப் பிரிப்பினும்
இருவீற்றும் உரித்தே சுட்டுங் காலை.
இதுவும் ஐயப்பொருள்மேல் சொல் நிகழ்த்துமாறு கூறுகின்றது.
(இ-ள்.) இரு
வீற்றும் சுட்டுங்காலை - திணை ஐயத்துக்கண்ணும்
அஃறிணைப்பால் ஐயத்துக்கண்ணும்
கூறும் மரபு கருதுமிடத்து,
உருவென மொழியினும் -
திணை ஐயத்துக்கண் உருவெனச்
சொல்லுமிடத்தும், அஃறி
|