டுருவங் கொண்ட
தொரு கூற்றங்கொல்!’ (கலித். 56: 9) எனவும்
பிறாண்டும் கூறுமாற்றான் உணர்க.
‘உருவு’
என்பது, உடல் உயிர் கூட்டப் பொதுமையாகிய ‘மக்கள்’
என்னும் பொதுமைக்கு ஏலாது உடலையே உணர்த்துதலானும், ‘பெற்றம்’
என்பது இயற்பெயராயினும் ஒருகாற் சொல்லுதற்கண் ஒருபால்மேல்
நில்லாது இருபால்மேல் நிற்றலானும், இவை வழுவமைதி ஆயின. (24)
அவை துணிந்தபின் அமையுமாறு
25.
தன்மை சுட்டலும் உரித்தென மொழிப
அண்மைக் கிளவி வேறிடத் தான.
இது
முன்னர்க் கூறிய பால் ஐயத்தையும்
திணை ஐயத்தையும்
துணிந்து கூறும்வழி அவற்றிற்கு
அண்மைத்தன்மை கூறும் மரபு
கூறுகின்றது.
(இ-ள்.) தன்மை
சுட்டலும் உரித்து - ஒருவர்க்குப் பால் ஐயமும்
திணை ஐயமும் நிகழ்ந்துழி அங்ஙனம் ஐயுறலே அன்றி அவர்க்கு அப்
பொருள்களின் உண்மைத் தன்மையைக் கருதுதலும் உரித்து, அண்மைக்
கிளவி வேறு இடத்தான என மொழிப - ஆண்டு ஒரு பொருள் ஒரு
பொருள் அன்றாம் தன்மை உணர்த்துஞ் சொல் ஐயத்துக்கு வேறாய்த்
துணிந்து தழீஇக்கொண்ட பொருளின்கண்ணது
என்று கூறுவர்
ஆசிரியர், எ-று.
(எ-டு.) இவன்
பெண்டாட்டி அல்லன், ஆண் மகன்; இவள் ஆண்
மகன் அல்லள், பெண்டாட்டி; இவன் குற்றி அல்லன், மகன்; இவ்வுரு
மகன் அன்று, குற்றி; இப்பெற்றம்
பல அன்று, ஒன்று; இப்பெற்றம்
ஒன்று அல்ல, பல என வரும்.
‘இவன்’
என்னும் எழுவாய், ‘அல்லன்’ என்பதனொடு
முடிந்தது.
‘மகன்’ என்பது, ‘இவன்’ என்னுஞ்
சுட்டுப் பெயர்க்குப் பெயர்ப்
பயனிலையாய் நின்றது. இவ
|