|
இயற்பெயரும் ஒருமை இயற்பெயரும் என்று கூறப்பட்ட
அந்நான்கும் என்று சொல்லுவர் ஆசிரியர், எ-று. (22)
சினைப்பெயர் நான்கன் பெயரும் முறையும்
179.
பெண்மைச் சினைப்பெயர் ஆண்மைச் சினைப்பெயர்
பன்மைச் சினைப்பெயர் ஒருமைச்சினைப் பெயரென்று
அந்நான் கென்ப சினைப்பெயர் நிலையே.
இது, சினைப்பெயர் நான்கு என்றவற்றின் பெயரும் முறையுங் கூறுகின்றது.
(இ-ள்.) சினைப்பெயர் நிலை - சினைப்பெயரது நிலைமையை, பெண்மைச் சினைப்பெயர் ஆண்மைச் சினைப்பெயர் பன்மைச் சினைப் பெயர் ஒருமைச் சினைப்பெயர் என்று அந்நான்கு என்ப - பெண்மைச் சினைப் பெயரும் ஆண்மைச் சினைப்பெயரும் பன்மைச் சினைப் பெயரும் ஒருமைச் சினைப்பெயரும் என்று கூறப்பட்ட அந்நான்கும் என்று சொல்லுவர் ஆசிரியர், எ-று. (26)
சினைமுதற்பெயர் நான்கன் பெயரும் முறையும்
180.
பெண்மை சுட்டிய சினைமுதற் பெயரே
ஆண்மை சுட்டிய சினைமுதற் பெயரே
பன்மை சுட்டிய சினைமுதற் பெயரே
ஒருமை சுட்டிய சினைமுதற் பெயரே
அந்நான் கென்ப சினைமுதற் பெயரே.
இது, சினை முதற்பெயர் நான்கு என்றவற்றின் பெயரும் முறையுங் கூறுகின்றது.
(இ-ள்.) சினை முதற்பெயரே-சினை முதற்பெயரது நிலைமையை, பெண்மை சுட்டிய சினைமுதற்பெயரே ஆண்மை சுட்டிய சினைமுதற் பெயரே பன்மை சுட்டிய சினைமுதற்பெயரே ஒருமை சுட்டிய சினைமுதற் பெயர் என்று அந்நான்கு என்ப-பெண்மை சுட்டிய சினைமுதற்பெயரும் ஆண்மை சுட்டிய சினைமுதற்பெயரும் பன்மை சுட்டிய சினைமுதற் பெயரும் ஒருமை சுட்டிய சினைமுதற்பெயரும் என்று கூறப்பட்ட அந்நான்கும் என்று சொல்லுவர் ஆசிரியர், எ-று. (24)
முறைப்பெயர் இரண்டன் பெயரும் முறையும்
181.
பெண்மை முறைப்பெயர் ஆண்மை முறைப்பெயரென்று
ஆயிரண் டென்ப முறைப்பெயர் நிலையே.
இது, முறைப்பெயர் இரண்டு என்
|