நச்சினார்க்கினியர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   628
Zoom In NormalZoom Out


றவற்றின் பெயரும் முறையும் கூறுகின்றது. 

(இ-ள்.)   முறைப்பெயர்  நிலையே - முறைப்பெயரது நிலைமையை,
பெண்மை  முறைப்பெயர்  ஆண்மை முறைப்பெயர் என்று ஆயிரண்டு
என்ப - பெண்மை முறைப்பெயரும் ஆண்மை முறைப்பெயரும் என்று
கூறப்பட்ட அவ்விரண்டும் என்று கூறுவர் ஆசிரியர், எ-று. (25) 

பெண்மை சுட்டிய விரவுப்பெயர்

182. பெண்மை சுட்டிய எல்லாப் பெயரும்
ஒன்றற்கும் ஒருத்திக்கும் ஒன்றிய நிலையே. 

இது,  பெண்மைப்   பெயரெல்லாந்   தொகுத்து  இரு திணைக்கும்
உரிமை கூறுகின்றது. 

(இ-ள்.)  பெண்மை  சுட்டிய  எல்லாப்  பெயரும்  -  பெண்மை
இயற்பெயரும்  பெண்மைச்  சினைப்பெயரும் பெண்மைச் சினைமுதற்
பெயரும் பெண்மை முறைப்பெயரும், ஒன்றற்கும் ஒருத்திக்கும் ஒன்றிய
நிலையே  -  அஃறிணைப்பெண் ஒன்றற்கும் உயர்திணை ஒருத்திக்கும்
பொருந்திய நிலைமையை உடையனவாம், எ-று. 

(எ-டு.)

சாத்தி வந்து; சாத்தி வந்தாள்.
முடத்தி வந்தது; முடத்தி வந்தாள்
முடக்கொற்றி வந்தது; முடக்கொற்றி வந்தாள்.
தாய் வந்தது; தாய் வந்தாள். 

என வரும். முடம், சினையாகிய காலை உணர்த்திற்று. 

‘ஆய்’     என்பதும் அது. ‘யாய்’ (குறுந் .40 அகம். 12:1) என்பது
தன்மையோடு  ஒட்டுதலின்  முறைப்பெயரெனினும்,  உயர்திணையாம்.
(26) 

ஆண்மை சுட்டிய விரவுப்பெயர்

183. ஆண்மை சுட்டிய எல்லாப் பெயரும்
ஒன்றற்கும் ஒருவற்கும் ஒன்றிய நிலயே. 

இஃது, ஆண்மைப்பெயர்,  எல்லாந்  தொகுத்து  இரு  திணைக்கும்
உரிமை கூறுகின்றது. 

(இ-ள்.)     ஆண்மை  சுட்டிய  எல்லாப்  பெயரும்-  ஆண்மை
இயற்பெயரும்  ஆண்மைச்  சினைப்பெயரும் ஆண்மைச் சினைமுதற்
பெயரும்  ஆண்மை முறைப்பெயரும், ஒன்றற்கும் ஒருவற்கும் ஒன்றிய
நிலையே  -  அஃறிணை  ஆண்  ஒன்றற்கும் உயர்திணை ஒருவற்கும்
பொருந்திய நிலைமையை உடையனவாம், எ-று. 

(எ-டு.) சாத்தன் வந்தது, சாத்தன் வந்தான்; முடவ