நச்சினார்க்கினியர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   629
Zoom In NormalZoom Out


டவன்     வந்தது,   முடவன்   வந்தான்;   முடக்கொற்றன்  வந்தது,
முடக்கொற்றான்  வந்தான்;  தந்தை  வந்தது,  தந்தை  வந்தான்  என
வரும். 

‘நுந்தை’ (கலி.  80:18) என்பதும்  அது. ‘எந்தை’ (கலி.81:35) என்பது
தன்மையோடு ஒட்டுதலின், உயர்திணையாம். (27) 

பன்மை சுட்டிய விரவுப்பெயர்

184. பன்மை சுட்டிய எல்லாப் பெயரும்
ஒன்றே பலவே ஒருவர் என்னும்
அன்றிப் பாற்கும் ஓரன் னவ்வே. 

இது, பன்மைப்பெயர் எல்லாந்  தொகுத்து இரு திணைக்கும் உரிமை
கூறுகின்றது. 

(இ-ள்.)  பன்மை சுட்டிய எல்லாப் பெயரும்-பன்மை இயற்பெயரும்
பன்மைச்  சினைப்பெயரும்  பன்மைச்  சினைமுதற் பெயரும், ஒன்றே
பலவே  ஒருவர்  என்னும்  அன்றிப்பாற்கும் ஓரன்னவ்வே-அஃறிணை
ஒருமையும்  அத்திணைப்  பன்மையும் உயர்திணை ஒருமையும் என்று
சொல்லப்படும் அம்மூன்று பாற்கும் ஒரு தன்மைய எ-று. 

‘ஒன்று’     என்பதனை அஃறிணை ஆண் ஒன்றனையும் பெண்
ஒன்றனையும் சுட்டுவதாகவும், ‘ஒருவர்’ என்பதனை உயர்திணை ஆண்
ஒருமையும் பெண் ஒருமையுமாகவும் கொள்க. 

(எ-டு.)  யானை வந்தது, யானை வந்தன, யானை வந்தான், யானை
வந்தாள்; நெடுங்கழுத்தல்வந்தது-வந்தன-வந்தான்-வந்தாள்; பெருங்கால்
யானை வந்தது-வந்தன-வந்தான்-வந்தாள் என வரும். 

‘வெண்குடைப்   பெருவிறல்’ என்பது, செங்குடை முதலியவற்றோடு
இயைபு  நீக்காது,  வெண்குடையோடு  இயைபுஇன்மை மாத்திரை நீக்கி
நின்றாற் போலப் ‘பண்மை சுட்டிய’ என்பதும் ஒருமை இயைபு நீக்காது
பன்மை  சுட்டுதலோடு  இயைபு  இன்மை  மாத்திரை  ஒருகால் நீக்கி
நின்றது. இஃது, இயைபு இன்