நச்சினார்க்கினியர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   632
Zoom In NormalZoom Out


கூறுகின்றது.

(இ-ள்.)  வரும்  பெயர்ச்சொற்கள்,  பால்  தெரிபு  இலவே;  உடன்
மொழிப் பொருள் - திணைப்பகுதி  தெரிய   நில்லா;   இரு  திணைப்
பொருளும்  ஒருங்கு தோன்று தலைப் பொருண்மையாக உடைய, எ-று.

(எ-டு.) நீயிர் வந்தீர்,  நீ  வந்தாய்,   என   வினையானும்  திணை
தெரியாமை   காண்க.   இவற்றிற்குத்  தத்தம்   மரபின்  வினை (174)
யின்று.(34) 

நீ என்பது ஒருமை

190. அவற்றுள்,
நீயென் கிளவி ஒருமைக் குரித்தே.
 

(இ-ள்.) இரண்டு   பெயருள்  நீ  என்னும் பெயர் ஒருவன் ஒருத்தி
ஒன்று என்பனவற்றிற்கெல்லாம்  பொதுவாகிய  ஒருமைக்கு  உரித்தாம்.
எ-று. 

(எ-டு.) நீ வந்தாய் என வரும். (35)

நீயிர் என்பது பன்மை

191. ஏனைக் கிளவி பன்மைக் குரித்தே.  

(இ-ள்.)   பெயர்   பல்லோர்க்கும்   பலவற்றிற்கும்   பொதுவாகிய
பன்மைக்கு உரித்தாம், எ-று. 

(எ-டு.) நீயிர் வந்தீர் என வரும். (36) 

ஒருர் என்பது உயர் இருபாற்கும் பொதுவாதல்

192. ஒருவ ரென்னும் பெயர்நிலைக் கிளவி
இருபாற்கு முரித்தே தெரியுங் காலை. 

பொதுவாய் நிற்றலின், ஈண்டுக் கூறினார். 

(இ-ள்.) என்னும் எண்ணியற் பெயர் (167)   என்றவற்றுள்   ஒருவர்
என்னும் பெயர் நிலைமையை   உடைய   சொல்,   தெரியும்   காலை
இருபாற்கும் உரித்தே - ஆராயுங்    காலத்து    உயர்திணைப்பாலுள்
ஒரு பால் உணர்த்தாது ஒரு
 

193. நீயிர் நீயென வரூஉங் கிளவி