|
(எ-டு.) ஒருவர் வந்தார் என வரும். (37)
ஒருவர் என்பது பன்மைவினை கொள்ளல்
194.
தன்மை சுட்டின் பன்மைக் கேற்கும்
(இ-ள்.) முடியுந்
தன்மையைக் கருதின், பன்மைக்கு ஏற்கும் - தான்
சுட்டுகின்ற பொருண்மைக்கு ஏற்ப ஒருமைச்சொல்லொடு
முடியாது,
ரகர ஈற்றதாய் நின்ற சொற்றன்மைக்கு ஏற்பப் பன்மைச்சொல் பெற்று
முடியும், எ-று.
(எ-டு.) ஒருவர் வந்தார், ஒருவர் அவர். இது பால் பற்றிய மரபு
வழுவமைதி. (38)
நீயிர், நீ, ஒருவர் : பால் தெரியுமாறு
195.
இன்ன பெயரே இவையெனல் வேண்டின்
முன்னஞ் சேர்த்தி முறையின் உணர்தல்.
(இ-ள்.)
என்பன இன்ன பாற்பெயர் என்று அறியலுறின், முன்னம்
சேர்த்தி முறையின் உணர்தல்-இடமுங் காலமும்
பற்றிச் சொல்லுவான்
குறிப்பொடு கூட்டி மேல் ஓதின முறையானே திணையும் பாலும்
உணர்க, எ-று.
(எ-டு.) விலங்கு வாராததோர் இடத்திருந்து நீயிர்வந்தீர்,
நீ வந்தாய்,
என்றால் உயர்திணை எனவும், மக்கள்
வாராததோர் இடத்திருந்து
அங்ஙனங் கூறினால் அஃறிணை எனவும் உணரப்படும். ‘நீயும்
தவறிலை நின்னைப் புறங்கடை,’ (கலி. 56:20) என்றவழிப் பெண்பால்
என்பதூஉம், ‘நீயே பிறர்நாடு கொள்ளுங் காலை,’ (புறம். 57: 5)
என்றவழி ஆண்பால் என்பதூஉம், ‘இன்துணைப் பிரிந்தாரை
உடைமையோ நீ,’ (கலி. 129:15)
சார்ந்தொழுகல் ஆற்றின்,’
(நாலடி. 309) என்றவழிச்
சொல்லுவானொடு கேட்
|