நச்சினார்க்கினியர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   634
Zoom In NormalZoom Out


பெண்மகன் : வினை கொளல்

196. மகடூஉ மருங்கின் பால்திரி கிளவி
மகடூஉ இயற்கை தொழில்வயி னான.
 

பொருண்மைக்கண் பால் திரிந்து வரும் பெண்மகன் என்னும் பெயர்,
தொழில்வயினான மகடூஉ இயற்கை   -   தொழில்   கொள்ளுமிடத்து
மகடூஉவிற்கு உரிய தொழில் கொள்ளும், எ-று.
 

(எ-டு.)   பெண்மகன்   வந்தாள் என வரும். பொருள்பற்றி  முடிபு
கூறிற்று. (40)

பெயரின் ஆகார ஈற்றயல் செய்யுளில் ஓகாரமாதல்

197. ஆஓ ஆகும் பெயருமா ருளவே;
ஆயிட னறிதல் செய்யு ளுள்ளே.
 

(இ-ள்.) திரியும் பெயரும் உள; ஆயிடன் அறிதல்  செய்யுளுள்ளே-
அத் திரியும் இடம் அறிக செய்யுளுள், எ-று. 

(எ-டு.)  ‘வில்லோன் காலன கழலே தொடியோள் மெல்லடி மேலவும்
சிலம்பே   நல்லோர், யார்கொல்! அளியர்  தாமே!’   (குறுந். 7) ‘கழனி
நல்லூர்   மகிழ்நர்க்   கென்,  இழைநெகிழ் பருவரல் செப்பா தோயே!’
(நற்.70) என வரும். 

அளபெடுத்தால் ஆ ஓ வாகா. (41) 

விரவுப்பெயர் செய்யுளுள் வரும் முறைமை

198. இறைச்சிப் பொருள்வயின் செய்யுளுள் கிளக்கும்
இயற்பெயர்க் கிளவி உயர்திணை சுட்டா
நிலத்துவழி மருங்கின் தோன்ற லான.
 

பெயர்க்   கிளவி   -   செய்யுளுள்   கருப்பொருள்  கூறும்வழிக்
கிளக்கப்படும் இரு திணைக்கும் உரிய பெயர்,  நிலத்துவழி  மருங்கின்
தோன்றலான   -  நால்வகை   ஒழுக்கங்களின்  இடமாகிய  இடத்தே
அவற்றிற்கு  உறுப்பாய்த்   தோன்றலின்,   உயர்திணை   சுட்டா  -
உயர்திணையை உணர்த்தாது அஃறிணையை உணர்த்தும், எ-று.
 

(எ-டு.) ‘கடுவன் முதுமகன் கல்லா மூலற்கு, வதுவை