|
|
|
உயர்திணை ஆண்பால் உணர்த்தும் அன்னீற்றுப்பெயர் அஃறிணை
ஆண்பாலையும் உணர்த்தி நிற்றலின் விரவுப்பெயராயினும், ஈண்டுப்
பொருட்கு உபகாரப்படும் இறைச்சிப் பொருளாய் நிற்றலின்,
அஃறிணைப்பெயராம். ‘குமரி’ என்பதூஉம் விரவுப்பெயர் ஈண்டு
அஃறிணைப் பெயர் ஆயிற்று. (42)
|
|
எய்தியது விலக்கல்
|
|
199.
|
திணையொடு பழகிய பெயரலங் கடையே. |
|
இஃது, எய்தியது விலக்கிற்று.
|
|
(இ-ள்.)
உணர்த்தும் விரவுப்பெயர் உயர்திணை சுட்டாது அஃறிணை சுட்டுவது
திணைதோறும் உரிமை பூண்டு வழங்கப்பட்டு வரும் பெயர் அல்லாத
இடத்து, எ-று.
|
|
உயர்திணையுஞ் சுட்டி வரும் என்பதாம்.
|
|
(எ-டு.) ‘அவளும், செருமிகு மொய்ம்பிற் கூர்வேற் காளையொடு’ (நற். 184) ‘திருந்துவேல் விடலையொடு வருமெனத் தாயே’ (அகம்.
195:2) என வரும். ஓர் எருந்தும் ‘காளை, விடலை’ எனப்படுதலின், இவை விரவுப் பெயராயின. (43)
|
|
பெயரியல் முற்றிற்று.
|
 |