|
லப்படும் அம்மூன்று காலமும், குறிப்பொடும் கொள்ளும் மெய்ந்நிலை உடைய - வினக்குறிப்பொடும்
பொருந்தும் உண்மை நிலைமையை உடைய, தோன்றலாறே - வினைச் சொல்லான் அக்காலங்கள்
தோன்றும் நெறிக்கண், எ-று.
(எ-டு.) உண்டான், உண்ணாநின்றான், உண்பான், எனக் காலம்
மூன்றுந் தோன்றி நின்றவாறு காண்க.
கரியன், செய்யன் என்பன வினைக்குறிப்பு.
இறப்பாவது, தொழிலது கழிவு; நிகழ்வாவது, தொழில் தொடங்கி முற்றுப் பெறாமல் நடக்கின்ற
நிலைமை; எதிர்வாவது, தொழில் பிறவாமை.
தொழிலாவது, பொருளினது புடைபெயர்ச்சி. இஃது இரண்டு கணங் காலத்தின்கண் நில்லாமையின்,
நிகழ்ச்சி என்பது ஒன்று இன்றாயினும், ‘உண்ணாநின்றான்,’ எனப் பஃறொழிற்றொகுதிபற்றி
நிகழ்ச்சியும் உடைத்தாயிற்று. இதனானே, ‘நிகழ் காலம் இன்று,’ என்பாரும், ‘நிகழ்
காலம் ஒன்றுமே உண்டு,’ என்பாரும் எனப் பல பகுதியர் ஆசிரியர் என்பது கொள்க. (3)
வினைச்சொற்களது பாகுபாடு
203.
குறிப்பினும் வினையினும் நெறிப்படத் தோன்றிக்
காலமொடு வரூஉம் வினைச்சொல் லெல்லாம்
உயர்திணைக் குரிமையும் அஃறிணைக் குரிமையும்
ஆயிரு திணைக்குமோ ரன்ன உரிமையும்
அம்மூ வுருபின தோன்ற லாறே.
இது, வினச்சொற்களது பாகுபாடு கூறுகின்றது.
(இ-ள்.) குறிப்பினும் வினையினும்
நெறிப்படத் தோன்றிக் காலமொடு வரூஉம் வினைச்சொல் எல்லாம் - குறிப்புப்
பொருண்மைக்கண்ணும் தொழிற்பொருண்மைக்கண்ணும் முறைமைப்படத் தோன்றிக் காலத்தொடு
வரும் எல்லா வினைச் சொல்லும், உயர்திணைக்கு உரிமையும் அஃறிணைக்கு உரிமையும்
ஆயிருதிணைக்கும் ஓரன்ன உரிமையும் -
உயர்திணைக்கு உரிமையுடைமையும் அஃறிணைக்கு உரிமையுடைமையும்
|