நச்சினார்க்கினியர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   639
Zoom In NormalZoom Out


 

அவ்விரண்டு     திணைக்கும்  ஒப்ப  உரிமையுடைமையும்  என,
அம்மூவுருபின  தோன்றலாறே  -  அம்மூன்று  கூற்றினையுடையவாந்
தோன்றும் நெறிக்கண், எ-று.
 

(எ-டு.) உண்டான், கரியன்; சென்றது, செய்யது; வந்தனை, வெளியை
என   வரும்.   ‘காலமொடு   வரூஉம்,’   எனப்  பின்னுங்  கூறினார்,
குறிப்பிற்குங் காலம் உண்டு என்பது வலியுறுத்தற்கு.
 

இம்முக்காலத்தும்  வருதற்கு  உரிய  காலங் காட்டும் எழுத்துக்களை
ஆசிரியர் எடுத்து ஓதாராயினார், பின் உள்ளோர் காலங்கட்கு உரியவாக
எடுத்தோதிய  எழுத்துக்கள் தம்முள் மயங்கியும் வருதலின்.  ஆசிரியர்,
அங்ஙனம்   மயங்குதல்பற்றி   எடுத்தோதாமையின்,  உரையாசிரியரும்
அவ்வெழுத்துக்களைச் சிறிதே காட்டினார்.
 

இனிப்  பின்னுள்ளோர்  கூறினார்  என்பதுபற்றியும், மாணாக்கர்க்கு
உய்த்     துணரும்     உணர்வின்று    என்பதுபற்றியும்,    யாமும்
அவ்வெழுத்துக்களைப்  பிரித்துக் காட்டுதும். சேனாவரையர் அவ்வாறு
பிரித்துக்  காட்டுகின்றவர், ‘நெறிப்படத் தோன்றி’ என்பதனாற் பிரித்துக்
காட்டுவர்.  அது  பொருந்தாது,  ஆசிரியர் எடுத்தோதாமல் ‘மயங்கும்’
என்று  போதலின்,  இதனைச்  ‘செய்யுள் மருங்கினும்’ (463)  என்னும்
அதிகாரப்  புறனடையிற்  ‘பிரித்தனர்  காட்டல்’ என்பதனாற் பிரித்துக்
காட்டுதும். அது மேற்கண்டு கொள்க. (4)
 

உயர்திணைத் தன்மைப்பன்மை வினைமுற்று
 

204.

அவைதாம்,
அம்ஆம் எம்ஏம் என்னுங் கிளவியும்
உம்மொடு வரூஉங் கடதற வென்னும்
அந்நாற் கிளவியோ டாயெண் கிளவியும்
பன்மை யுரைக்குந் தன்மைச் சொல்லே.
 

இது, முறையானே உய