நச்சினார்க்கினியர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   641
Zoom In NormalZoom Out


 

நக்கனமல்லம்,   உண்டனமல்லம்,   உரைத்தனமல்லம்,     தின்றனமல்லம்
எனவும்,    நக்காம்,    உண்டாம்,    உரைத்தாம்,   தின்றாம்;  நக்கிலாம்,
உண்டிலாம்,  உரைத்திலாம்,  தின்றிலாம்;  நக்காமல்லாம்,  உண்டாமல்லாம்,
உரைத்தாமல்லாம்,   தின்றாமல்லாம்   எனவும்   நக்கனெம்,  உண்டனெம்,
உரைத்தனெம்,   தின்றனெம்;   நக்கிலெம்,   உண்டிலெம்,  உரைத்திலெம்,
தின்றிலெம்:     நக்கனெமல்லெம்,      உண்டனெமல்லெம்,     உரைத்த
னெமல்லெம்,     தின்றனெமெல்லெம்    எனவும்,   நக்கனேம்,  நக்கேம்;
உண்டனேம்,   உண்டேம்,   உரைத்தனேம்,   உரைத்தேம்;    தின்றனேம்,
தின்றேம்;   நக்கிலேம்,   உண்டிலேம்,    உரைத்திலேம்,  தின்றேமல்லேம்
எனவும் வரும்.
 


 

(எ-டு.)   நீயும்  யானும்  உண்டனம்;  நீயும் யானும் உண்டாம்; நீயும்
யானும்  அவனும்  உண்டனம்;  நீயும்  யானும்  அவனும் உண்டாம் என
வரும். ஏனையவற்றோடும் ஒட்டுக.
 


 

(எ-டு.) யானும் அவனும் உண்டனெம்; யானும் அவனும் உண்டனேம்,
யானும் அவனும் உண்டேம்  என வரும். ஏனையவற்றோடும் ஒட்டுக.
 

ஒழித்து ‘இன்’ பெற்று வரும்.
 

(எ-டு.) அஞ்சினம், தப்பினம் எனவும்; உரிஞினம், எண்ணினம்,  பொரு
நினம்,  திருமினம், பன்னினம் எனவும், போயினம்; வாரினம்,   சொல்லினம்,
மேவினம், எள்ளினம் எனவும் வரும். ஒழிந்த மூவீற்றோடும் ஒட்டுக. கலக்கி