நச்சினார்க்கினியர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   642
Zoom In NormalZoom Out


 

னம்,   தெருட்டினம், அருத்தினம், அரற்றினம் என்பன, ககர ஈறும்
டகர  ஈறும்  தகர  ஈறும்  றகர ஈறும் முதல்நிலைச் சொல்லாய் நின்று
‘இன்’ பெற்றன.
 

இனி,   இவை   நிகழ்காலம்   பற்றி   வருங்கால்  ‘நில்,  நின்று’
என்பவற்றொடு  வந்து,  முற்கூறியவாறே நிற்கும். ‘நில்’ என்பது லகரம்
னகரமாய்த் தனக்கேற்ற றகரம் பெற்று நிற்கும்.
 

இனி, ‘நின், கின்’ என நிற்கும் என்றுமாம்.
 

(எ-டு.)  உண்ணாநின்றனம்,   உண்கின்றனம்;  உண்ணாநின்றிலம்,
உண்கின்றிலம்     எனவும்,     உண்ணாநின்றாம்,     உண்கின்றாம்;
உண்ணாநின்றிலாம்,   உண்கின்றிலாம்  எனவும்,  உண்ணாநின்றனெம்,
உண்கின்றனெம்;   உண்ணா  நின்றிலெம்,  உண்கின்றிலெம்  எனவும்,
உண்ணாநின்றனேம், உண்கின்றனேம் உண்ணாநின்றேம், உண்கின்றேம்;
உண்ணாநின்றிலேம், உண்கின்றிலேம் எனவும் வரும்.
 

உண்ணடாகிடந்தாம்,   உண்ணாவிருந்தாம்   எனக்   ‘கிட,  இரு’
என்பனவும் நிகழ்காலத்து வரும்.
 

உண்கிறேமெனக் ‘கிறு’ என்பது நிகழ்காலம் உணர்த்துதல்  இக்கால
வழக்கு.
 

இனி, இவை எதிர்காலம் பற்றி வருங்கால் பகரமும் வகரமும்பெற்று
வரும். வகரம் ஏற்புழிக் குகரமும் உகரமும் அடுத்தும் நிற்கும்.

(எ-டு.)  உண்பம்,  உண்குவம்,  உரிஞுவம், திருமுவம், உண்ணலம்
எனவும்;   ‘உண்பாம்,  உண்குவாம்,  உண்ணாம்  எனவும்;  உண்பெம்
உண்குவெம்,    உண்ணலெம்   எனவும்;   உண்பேம்,   உண்குவேம்,
உண்ணேம் எனவும் வரும்.
 

இனி,  ‘அம்’  ஈறு  வருங்கால்,  அண்க ணாளனை நகுகம் யாமே.’
(அகம்.  32:21)  எனவும்,  ‘பாடுகம்  வம்மின்  போதுகம்.’ (கலி.104:63)
எனவும்,   ‘பாடுகம்  வாவாழி  தோழி,’  (கலி.  41:1)  எனவும்  ககரம்
எதிர்காலமும் உணர்த்தி வரும். கூறுவன், சொல்லுவன், போதுவன் என
வரும் வகரமும் எதிர்காலம் உணர்த்தும்.