நச்சினார்க்கினியர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   644
Zoom In NormalZoom Out


 

சிறுபான்மை ஏனைக்காலத்தும் வரும்.
 

(எ-டு.)  உண்கு,  உண்டு,  வருது,  சேறு, உரிஞுகு, திருமுகு என ‘உம்’
ஈறு    போல    எதிர்காலங்  காட்டின.  ‘கழிந்தது பொழிந்தென வான்கண்
மாறினும்,   தொல்லது   விளைந்தென   நிலம்வளங்   கரப்பினும்’   (புறம்.
203:1,2)    என்புழிப்    ‘பொழிந்து’    எனவும்,    ‘விளைந்து’    எனவும்
இறந்தகாலம்    உணர்த்தின.    நிகழ்காலம்   வந்துழிக்   காண்க.  ‘அழா
அற்கோ    வினியே    நோய்    நொந்துறைவி’   (குறுந்.  192)  என்னுங்
குறுந்தொகைப்     பாட்டினுள்’    ‘அழுது’    என்னும்    உடம்பாட்டிற்கு
‘அழாஅற்கு’ என எதிர்மறை வந்தது.
 

கோள்     முற்றாயும்     நிற்கும்.     ‘நெடுந்தேர்    தாங்குமதி   வலவ!
என்றிழிந்தனன்’  (அகம். 66:12,13)  எனவும்  ‘தாங்குநின்  அவலம்  என்றீர்’
எனவும்    ‘நீயுறும்   பொய்ச்சூள்   அணங்காகின்   மற்றினி,   யார்மேல்
விளியுமோ? கூறு’ (கலி.88, 20,21) எனவும் வரும்.
 

எழுத்துப்   பெறுங்கால்   ‘என்’   ஈறு  ‘எம்’ ஈற்றோடும், ‘ஏன்’ ஈறு ‘ஏம்’
ஈற்றோடும்   ஒக்கும்.   உண்டனென்,  உண்டிலென், உண்டனெனல்லென்;
உண்ணாநின்றனென்,        உண்கின்றனென்,       உண்ணாநின்றிலென்,
உண்கின்றிலென்;   உண்பென்,   உண்குவென்,   உண்ணலென்   எனவும்,
உண்டனேன்,     உண்டேன்,     உண்டிலேன்,     உண்டனேனல்லேன்;
உண்ணாநின்றனேன்,         உண்ணாநின்றேன்,        உண்கின்றனேன்,
உண்கின்றேன், உண்ணாநின்றிலேன், உண்கின்