|
(எ-டு.) உண்டனன், உண்டிலன்; உண்ணாநின்றனன், உண்கின்றனன், உண்ணாநின்றிலன்,
உண்கின்றிலன்; உண்பன், உண்குவன், உண்ணலன் எனவும், உண்டான்,
உண்டிலான்; உண்ணாநின்றான், உண்கின்றான், உண்ணாநின்றிலான், உண்கின்றிலான்;
உண்பான், உண்குவான், உண்ணான் எனவும், உண்டனள், உண்டிலள்;
உண்ணாநின்றனள், உண்கின்றனள், உண்ணாநின்றிலள், உண்கின்றிலள்;
உண்பள், உண்குவள், உண்ணலள் எனவும், உண்டாள், உண்டிலாள்; உண்ணாநின்றாள்,
உண்கின்றாள். உண்ணாநின்றிலாள், உண்கின்றிலாள்; உண்பாள், உண்குவாள்,
உண்ணாள் எனவும் வரும், உண்டனனல்லன், உண்டானல்லன்; உண்டனளல்லள்,
உண்டாளல்லள் எனப் பிற வாய்ப்பாட்டான்வரும் மறையும் அறிக. (8)
|