நச்சினார்க்கினியர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   647
Zoom In NormalZoom Out


இவை காலஎழுத்துப் பெறுங்கால் அன்  ஈற்றோடு அர் ஈறும், ஆன்
ஈற்றோடு ஆர் ஈறும் ஒக்கும். 

(எ-டு.)   உண்டனர், உண்டிலர்; உண்ணாநின்றனர்,  உண்கின்றனர்,
உண்ணாநின்றிலர்,  உண்கின்றிலர்; உண்பர்,   உண்குவர்,  உண்ணலர்
எனவும்,  உண்டார்,  உண்டிலார்;   உண்ணாநின்றார்,   உண்கின்றார்,
உண்ணாநின்றிலார், உண்கின்றிலார்; உண்பார், உண்குவார்,  உண்ணார்
எனவும்  வரும்.   உண்டனரல்லர்,  உண்டாரல்லர் என   வரும் மறை
விகற்பமும் அறிக. 

அடாதும் நிற்கும். 

(எ-டு.)   உரிஞுப வருகுப எனவும்,  உண்ப  எனவும் வரும். ஒழிப,
தவிர்ப     என  மறையும்  வரும்.    உண்ணா   தொழிப   என்பது
எல்லாவற்றிற்கும் பொது.  இஃது, உண்ணாநிற்ப   என  நிகழ்காலத்தும்
வரும். (9) 

செய்மார் வினைகொண்டு முடிதல்

209. மாரைக் கிளவியும் பல்லோர் படர்க்கை
காலக் கிளவியொடு முடியு மென்ப. 

கூறுகின்றது. 

(இ-ள்.) அன்றி,  மார்  ஈற்றுச்  சொல்லும்  பல்லோரை உணர்த்தும்
படர்க்கைச் சொல்லாம்; காலக்  கிளவியொடு  முடியும்  என்ப - அஃது
அவைபோலப் பெயர் கொள்ளாது வினைகொண்டு முடியும், எ-று.
 

(எ-டு.)  ‘எள்ளுமார்  வந்தாரே  ஈங்கு,’ (கலி. 81:24) ‘ஆர்த்து  ஆ
கொண்மார்  வந்தார்’ என  வரும். இஃது எதிர்காலம். ‘நிலவன்  மாரே
புலவர்’ (புறம். 375: 18) ‘பாடில் மன்னரைப் பாடன்மார்  எமரே’ (புறம்.
375:21) ‘நோய்மலி வருத்தம் காணன்மார் எமரே’ (நற்.64) என்