நச்சினார்க்கினியர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   651
Zoom In NormalZoom Out


 

மைப்பொருளும்   என இருவகைப்படும். உடைமைத்தன்மையாவது,
தன்   செல்வத்தை   நுகராதே   நினைந்து  இன்புறுதற்கு ஏதுவாகிய
பற்றுள்ளம்.    அஃது,    ‘ஆங்கவை   ஒருபாலாக’   (12)  என்னும்
மெய்ப்பாட்டியற்சூத்திரத்து ‘உடைமை இன்புறல்’ என்பதனான் உணர்க.
உடைமைப்  பொருளாவது,  ஒன்றற்கு ஒன்றை உரிமை செய்து நிற்பது.
அஃது,  ‘இப்பொருளினுடையது  இப்பொருள்’  என்றும்,  ‘இப்பொருள்
இப்பொருளினுடைமையாயிருந்தது,’      என்றும்,     ‘இப்பொருளை
உடையதாயிருந்தது  இப்பொருள்’ என்றும் மூன்று வகைப்படும். அவை
முறையே   ‘சாத்தனது   ஆடை’  என  ஆறன்  உருபாயும், ‘ஆடை
சாத்தனது,’     எனவும்,     ‘குழையன்,     கச்சினன்’     எனவும்
வினைக்குறிப்பாயும்  நிற்கும். உருபு உணர்த்தும்வழி ஆடை முதலியன
பின்  நிற்குமாறும்,  குறிப்பு  உணர்த்தும் வழி ஆடை முதலியன முன்
நிற்குமாறும்   உணர்க.  ‘குழையன்’  என்புழி,  மேல்வந்து  முடிக்கும்
வினைமுதற்  பெயரைத்  தோற்றுவித்து  நிற்கும் ‘அன்’ என்னும் பால்
காட்டும்  ஈறு நின்று உடைமைப் பொருளைத் தனக்கு உரிமைசெய்யும்
உடைமையை விரித்து நிற்கும் என்றுணர்க.
 

இனி,   ‘இலத்தன், புறத்தன்’ எனவும், ‘பொன்னன்னன், புலி போல்
வான்’  எனவும், ‘கரியன், செய்யன்’ எனவும் வரும். ‘கரியன்’  என்பது.
‘இவ்வண்ணமாய்    இருப்பன்,’    என்னும்    பொருள்   உணர்த்தி
முதனிலையாய்    நிற்றலின்,    பண்பாம்.    ‘கருமையன்’   என்பது,
பண்புப்பெயர்  உடைமைப்பொருளாய்  நின்று  ‘கருமையை உடையன்’
என   உருபேற்று   நிற்றலின்,   உடைமைப்பொருளாம்.  ‘இவ்வாறன்
உடைமைப்பொருட்கு   இரண்டாவது  விரியுமாறு  என்னை?’  எனின்,
‘வனைந்தான்’ என்னுந் தெரிநிலை முற்றுச் சொல் ‘செய்தான்’ என்