|
|
|
னுங் காரியத்தினை நிகழ்த்தும் காரணங்கள் எட்டனையும் உள்ளடக்கி வினைமுதலோடு அமைந்து மாறிநின்று அவாய்நிலை தோன்றிய காலத்துச் செயப்படுபொருள் முதலிய ஏழனையும் விரித்து நிற்குமாறுபோல, ‘உடையன்’ என்னும் வினைக்குறிப்பு முற்றுச்சொல்லும், உடையனாய் இருந்தான்’ என விரிந்துழி, உணரப்படும் காரியத்தினை நிகழ்த்தும் காரணங்கள் எட்டனையும் உள்ளடக்கி வினைமுதலோடு அமைந்து மாறி நின்று அவாய்நிலை தோன்றிய காலத்துச் செயப்படு பொருள் முதலிய ஏழனையும் விரித்து நிற்கும் ஆதலான், ‘உடையன்’ என்பதனுள் அடங்கி நின்ற செயப்படுபொருட்குக் ‘குழையை’ என உருபை விரித்தல் அதற்கு இயல்பு என்று உணர்க. இத்தெரிநிலையும் குறிப்பும் இங்ஙனம் உருபை விரித்து நிற்றலின் அன்றே ஆசிரியர்,
|
|
‘ஐயெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி
எவ்வழி வரினும் வினையே வினைக்குறிப்பு
அவ்விரு முதலிற் றோன்றும் அதுவே’
|
|
என்றது.
|
|
தெரிநிலைவினைத் தொழிற்பெயர் காலந் தோன்றி நின்றாற்போலக் ‘கச்சினான், இலத்தான்’ என்றாற்போலுங் குறிப்புப்பெயருங் காலந் தோன்றிநிற்கும் என்றுணர்க.
|
|
‘தன்னினம் முடித்தல்’ என்பதனான், ‘ஐயாட்டையன், துணங்கையன்’ எனச் சிறுபான்மை காலமும் வினைசெய் இடமும்பற்றி வருவனவுங் கொள்க.
|
|
‘ஒப்பினானும்’ என்பதற்கு உதாரணமாகிய ‘பொன்னன்னான்’ என்பது, ஒப்புமைக் குணப்பண்பாதலின், வினக்குறிப்பிற்கும் குணப்பண்பிற்கும் உரியவாக மேற்கூறுகின்ற ‘வன்மை’ முதலியவற்றொடு வைக்க.’ எனின், இக் குணம் உவமைக்கும் உவமிக்கும் பொருட்கும் ஒப்பநிற்றலின் ஈண்டு வைத்தார், அவற்றின் வேறென்று கருதி. (16)
|
|
இதுவும் அது
|
|
அன்மையின் இன்மையின்
|
 |