|
அஃறிணைப் பன்மைத் தெரிநிலை வினைமுற்று
218.
அஆ வஎன வரூஉம் இறுதி
அப்பால் மூன்றே பலவற்றுப் படர்க்கை.
இது, முறையானே அஃறிணைத் தெரிநிலைவினை கூறுகின்றது.
(இ-ள்.) அ ஆ வ என வரூஉம் இறுதி அப்பால் மூன்றே - அகரமும் ஆகாரமும் வகர உயிர்மெய்யுமாகிய ஈற்றையுடைய அக்கூற்று மூன்று சொல்லும், பலவற்றுப் படர்க்கை - அஃறிணைப் பன்மைப் படர்க்கை வினையாம், எ-று.
அகரம் இறந்தகாலம் பற்றி வருங்கால் ‘க, ட, த, ற’ என்னும் அந்நான்கன்முன் ‘அன்’ பெற்றும் பெறாதும், ஏனை எழுத்தின்முன் ஙகார ழகாரம் ஒழித்து ‘இன்’ பெற்றும், யகரத்தின்முன் சிறுபான்மை இன்னேயன்றி ‘அன்’னும் பெற்றும் பெறாதும் வரும்.
(எ-டு.) தொக்கன, தொக்க, தொக்கில; உண்டன, உண்ட, உண்டில; வந்தன, வந்த, வந்தில; சென்றன, சென்ற, சென்றில எனவும்; அஞ்சின, தப்பின எனவும், உரிஞின, நண்ணின, பொருநின, செருமின, துன்னின எனவும், போயின, சேரின, சொல்லின, மேவின, துள்ளின எனவும், போயன, போய எனவும் வரும்.
இனி, அகரம் நிகழ்காலம் பற்றி வருங்கால் ‘நில், கின்று’ என்பனவற்றோடு ‘அன்’ பெற்றும் பெறாதும் வரும். உண்ணாநின்றன, உண்ணாநின்ற, உண்ணாநின்றில; உண்கின்றன, உண்கின்ற, உண்கின்றில என வரும்.
இனி, அகரம் எதிர் காலம் பற்றி வருங்கால் பகர வகரத்தோடு ‘அன்’ பெற்றும் பெறாதும் வரும்.
(எ-டு.) உண்பன, உண்ப, உண்ணல; வருவன, வருவ என வரும். உரிஞுவன, உரிஞுவ என உகரம் பெற்று ஏனை எழுத்தின்கண் வருதலும் ஏற்புழிக் கொள்க.
இனி, ஆகாரம் காலஎழுத்துப் பெறாது எதிர்காலத்துப் பயின்று மறையாய் வரும்.
(எ-டு.) உண்ணா, தின்னா என வரும்.
இனி, வகரம் எதிர்காலத்திற்கு உரித்தாய்க் குகர
|