நச்சினார்க்கினியர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   656
Zoom In NormalZoom Out


கரம் பெற்றும் பெறாதும், ஏற்றவழி உகரம் பெற்றும் வரும். 

(எ-டு.) உண்குவ,   தின்குவ   எனவும்,  ஓடுவ,  தாவுவ  எனவும்,
உரிஞுவ,  செருமுவ  எனவும் வரும். உண்டனவல்ல,  உண்டனவில்லை
எனப் பிற வாய்ப்பாட்டு மறையும் அறிக. (19) 

அஃறிணை ஒருமைத் தெரிநிலை வினைமுற்று

219. ஒன்றன் படர்க்கை த ற ட ஊர்ந்த
குன்றிய லுகரத் திறுதி யாகும். 

இஃது, ஒருமைவினை கூறுகின்றது. 

(இ-ள்.)   ஒன்றன்  படர்க்கை - ஒன்றனை உணர்த்தும் படர்க்கை
வினையாவது,  த ற ட ஊர்ந்த குன்றியலுகரத்து இறுதி ஆகும் - த ற,
ட   என்னும்   ஒற்றுக்களை  ஊர்ந்து  நின்ற  குன்றிய  லுகரத்தினை
ஈறாகவுடைய சொல்லாம், எ-று. 

தகர  உகரம்   இறந்தகாலத்து  வருங்கால் ‘க, ட, த, ற’க்கள் முன்
அகரம்  பெற்றும், ஏனை எழுத்தின்முன் இகரமும் யகர உயிர்மெய்யும்
பெற்றும், யகர உயிர்மெய்யே பெற்றும் வரும். 

(எ-டு.)  புக்கது, புக்கிலது; உண்டது, உண்டிலது; வந்தது, வந்திலது;
சென்றது, சென்றிலது எனவும், எஞ்சியது, தப்பியது எனவும்  உரிஞியது,
நண்ணியது,  பொருநியது,  செருமியது,  துன்னியது  எனவும், போயது,
கூறியது, சொல்லியது, மேவியது, துள்ளியது எனவும் வரும். 

இனி, நில்,  கின்று  என்பனற்றொடு  நிகழ்காலத்தின்கண்  அகரம்
பெற்று வரும். 

(எ-டு.) நடவாநின்றது, நடவாநின்றிலது; நடக்கின்றது, நடக்கின்றிலது,
உண்ணாநின்றது,  உண்ணாநின்றிலது; உண்கின்றது, உண்கின்றிலது என
வரும். 

இனி, எதிர்காலத்தின்கண்  உயிர்மெய்யான  பகர  வகரம்  பெற்று,
உண்பது, செல்வது என வரும். 

றகர  உகரம், ‘க, ட, த, ற’ என்பனவற்றின்முன் அன்னும் இன்னும்
பெற்றும், ஏனை எழுத்தின்முன் ‘இன்’ பெற்றும், அவ்வின்னின் னகரம்
தி